குழந்தைகளையும், தந்தையையும் பறிகொடுத்த சோகம்; இளம்பெண் திவ்யா எடுத்த அதிர்ச்சி முடிவு

 

குழந்தைகளையும், தந்தையையும் பறிகொடுத்த சோகம்; இளம்பெண் திவ்யா எடுத்த அதிர்ச்சி முடிவு

பட்டாசு கடை தீவிபத்தில் தந்தையையும், தன் இரு மகன்களையும் பறிகொடுத்த துயரத்தில் இளம்பெண் திவ்யா அந்த அதிர்ச்சி முடிவை எடுத்துவிட்டார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரியில் 60 வயதான மோகன் ரெட்டி என்பவர், லத்தேரி பேருந்து நிலையத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தார். 1992ஆம் ஆண்டிலிருந்து இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகிறார். தன் மகள் திவ்யா பெயரில்தான் லைசென்ஸ் அனுமதி பெற்று இந்த கடையை நடத்தி வந்திருக்கிறார்.

குழந்தைகளையும், தந்தையையும் பறிகொடுத்த சோகம்; இளம்பெண் திவ்யா எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்நிலையில் மகள் திவ்யாவின் குழந்தைகள் தனுஷ்(8), தேஜஸ்(6) ஆகிய இருவரும் கடந்த 18ஆம் தேதி கடைக்கு வந்தனர். கடையில் அவர்கள் தாத்தாவுடன் இருந்தனர். மதியம் 12 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை வாங்கி கொண்டிருந்தனர். அப்போது சிலர் புதியரக வெடிகளை வாங்கிக் கொண்டு, ’’இது எப்படி வெடிக்கும்? எப்படி வெடிக்க வேண்டும்?’’ என்று கேட்டிருக்கிறார்கள் அதற்கு மோகன் ரெட்டி செய்து காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு, குழந்தைகளை கடைக்கு உள்ளேயே பத்திரமாக இருக்கச் சொல்லிவிட்டு, கடைக்கு வெளியே வந்து வெடிகளை வெடித்து கட்டியிருக்கிறார். அப்போது வெடியில் இருந்து சிதறிய தீப்பொறி கடைக்குள் சென்று விழுந்திருக்கிறது.

குழந்தைகளையும், தந்தையையும் பறிகொடுத்த சோகம்; இளம்பெண் திவ்யா எடுத்த அதிர்ச்சி முடிவு

அடுத்த கணமே அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி இருக்கின்றன. இதில் அதிர்ந்துபோன மோகன் ரெட்டி, குழந்தைகளை காப்பாற்ற ஓடியிருக்கிறார். அதற்குள், பதற்றத்தில் இருந்த குழந்தைகள் கடையை விட்டு வெளியே வருவதற்கு பதிலாக, பட்டாசுகள் அதிகமாக பெரிய பெரிய பட்டாசுகள் இருந்த இன்னொரு அறைக்குள் ஓடி விட்டார்கள். அவர்களை காப்பாற்ற மோகன்ரெட்டியும் அந்த அறைக்குள் நுழைந்துவிட்டார்.

அந்த அறையில் இருந்த பெரிய பெரிய பட்டாசுகள் அதற்குள் வெடித்து சிதறியதால், மூவரும் வெளியே வரமுடியவில்லை. இரண்டு குழந்தைகளும் மோகன் ரெட்டி துடிதுடித்து உயிரிழந்தனர்.

குழந்தைகளையும், தந்தையையும் பறிகொடுத்த சோகம்; இளம்பெண் திவ்யா எடுத்த அதிர்ச்சி முடிவு

பட்டாசு கடை வெடித்து சிதறியதால் அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு தண்ணீர் லாரியை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். மண்ணை அள்ளிக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் மூவரும் சடலம் ஆகிவிட்டனர். அருகில் இருந்த சில கடைகளும் தீக்கிரையாகி விட்டன. அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீக்கிரையாகி விட்டன.

இந்த கோர சம்பவத்தில் தன்னை பெற்றெடுத்த அப்பாவையும் தன் இரு மகன்களையும் பறிகொடுத்த துயரத்தில் இருந்தார் திவ்யா. உறவினர்கள் எவ்வளவோ சொல்லி அவரை தேற்றினர். ஆனாலும் துக்கத்திலிருந்து மீள முடியவில்லை. பெத்த பிள்ளையை பறிகொடுத்து விட்டேன்..பெற்றவரையும் பறிகொடுத்து கொடுத்து விட்டேனே என்று அழுது கொண்டிருந்திருக்கிறார்.

துக்கத்தில் இருந்த திவ்யா அந்த அதிர்ச்சியான முடிவு எடுத்து விட்டார். ரயில் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். முதியவரும் இரு குழந்தைகளும் பட்டாசு கடை வெடி விபத்தில் பலியான சோகம் மாறுவதற்கு முன், திவ்யா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.