களமிறங்கிவிட்டது விஜய் மன்றம்: காஞ்சியில் தொடக்கம்

 

களமிறங்கிவிட்டது விஜய் மன்றம்: காஞ்சியில் தொடக்கம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி திரைப்படங்களில் தொடர்ந்து பேசி வந்தார் நடிகர் விவேக். அதன் மூலமாக அப்துல் கலாமின் அறிமுகம் கிடைத்து அவரின் அன்பும் கிடைத்தது விவேக்கிற்கு.

களமிறங்கிவிட்டது விஜய் மன்றம்: காஞ்சியில் தொடக்கம்

அப்துல்கலாமின் சந்திப்பிற்கு பின்னர் அவரின் அறிவுறுத்தலின்படி ’கிரீன் கலாம்’ என்ற அமைப்பை தொடங்கி இதுவரைக்கும் 33 லட்சம் மரக்கன்றுகளை நட்டு உள்ளார் விவேக். இது குறித்து அப்துல் கலாமிடம் சில லட்சம் மரங்கள் நட்டு விட்டு சென்று சொன்னபோது, ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட்டு வா என்று அவர் சொன்னதாக சொல்லி இருந்தார் விவேக்.

மரக்கன்றுகளை நட சொல்லி விவேக்கிடம் சொன்னது குறித்தும், அதை தீவிரமாக எடுத்துக் கொண்டு அவர் செயல்பட்டது குறித்தும் தன் குடும்பத்தினரிடம் உரையாடியபோது சொல்லியிருக்கிறார் அப்துல் கலாம். ‘’விவேக் ஒரு நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல. சிறந்த சமூக ஆர்வலர். மரக்கன்றுகளை நடவேண்டும் என்று ஒரு வரிதான் அவரிடம் சொன்னேன். அதுவும் ஒரு முறை தான் சொன்னேன். அதை ஏற்றுக் கடைபிடித்து தமிழகம் முழுவதும் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.. நல்ல பிள்ளை’’ என்று தெரிவித்திருக்கிறார். இதை அப்துல் கலாமின் அண்ணன் மகள் நசீமா மரைக்காயர், விவேக்கின் மறைவிற்குப் பின் தெரிவித்திருக்கிறார்.

களமிறங்கிவிட்டது விஜய் மன்றம்: காஞ்சியில் தொடக்கம்

ஒரு கோடி மரங்களை நட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தார் விவேக். ஆனால் அதற்குள் காலன் அவரை அழைத்துக்கொண்டான். விவேக்கின் மறைவுக்குப் பின்னர் அவரின் கனவை நிறைவேற்றுவதாக பிரபலங்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். நடிகர் அருண்குமார், நடிகை தேவயானி தம்பி உள்ளிட்ட பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

விவேக்கின் ஒரு கோடி கனவு 33 லட்சம் மரங்களோடு நின்றுவிடக்கூடாது என்று பலரும் கை கொடுத்து வரும் நிலையில், நடிகர் மயில்சாமி விவேக்கின் கனவை ஒவ்வொருவரும் ஏற்று செயல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

களமிறங்கிவிட்டது விஜய் மன்றம்: காஞ்சியில் தொடக்கம்

இதையடுத்து நடிகர் விஜய் ரசிகர்கள் விவேக்கின் கனவை நிறைவேற்றுவதாக பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். முதற்கட்டமாக ஒரு லட்சம் மரங்களுக்கு நாங்க பொறுப்பு என்று களம் இறங்கி இருக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுதாக உறுதி மொழி எடுத்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினரும் இதே மாதிரி செய்து விவேக்கின் கனவை நிறைவேற்றுவோம் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.