சென்னையில் இதுவரை 2,478 பேர் கொரோனாவால் மரணம்: மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

 

சென்னையில் இதுவரை 2,478 பேர் கொரோனாவால் மரணம்: மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

தமிழத்தில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான் என்பது அனைவரும் அறிந்தவையே. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்ததால், தமிழக அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவும் மண்டலங்கள் கண்டறியப்பட்டு, 300 மக்களை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமனம் செய்யப்பட்டனர். அதே போல கொரோனா அதிகமாக பரவும் பகுதிகளில் கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக தற்போது சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து உயிர்பிழைத்துக் கொள்ள சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் எல்லாம் தற்போது மீண்டும் சென்னைக்கு படையெடுக்கின்றனர்.

சென்னையில் இதுவரை 2,478 பேர் கொரோனாவால் மரணம்: மாநகராட்சி நிர்வாகம் தகவல்!

இந்த நிலையில், சென்னையில் கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,17,839 நபர்களுள் தற்போது 12,003 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 1,03,358 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இதுவரை 2,478 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் நேற்று ஒரே நாளில் 11,796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.