இரவு நேர ஊரடங்கு மட்டும் போதுமானதல்ல…ராமதாஸ்

 

இரவு நேர ஊரடங்கு மட்டும் போதுமானதல்ல…ராமதாஸ்

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. முழு நேர ஊரடங்கு வந்துவிடுமா என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மக்கள்.

இரவு நேர ஊரடங்கு மட்டும் போதுமானதல்ல…ராமதாஸ்

இந்நிலையில், ‘’தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதல்ல. மக்களை பாதிக்காத வகையில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

அவர் மேலும், ‘’மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் மிகவும் முக்கியமானதான டாஸ்மாக் மதுக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். அதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்தும், 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் மக்களைக் காப்பாற்ற முடியும்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது.. மக்களே… விழிப்புணர்வுடன் இருங்கள். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வராதீர்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணியுங்கள். தகுதியுள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள்’’என்று வலியுறுத்துகிறார்.