தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்

 

தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்

தடுப்பூசிகள் பற்றாக்குறை என்று ஒருபக்கம் புகாரும், ஆர்ப்பாட்டங்களூம் இருந்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்களுக்கு இலவச திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன.

தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்

முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டமாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, இரண்டாம் கட்டமாக 60 வயதை கடந்தவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. அடுத்தபடியாக 45 வயதை கடந்தவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து நான்காவது கட்டமாக தற்போது 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்

கொரோனா 2வது அலையில் பாதிப்புகள் அதிகம் இருப்பதால் மக்கள் எந்தவித அச்சமும் இன்றி தாங்களாகவே முன் வந்து கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு தக்காளியை வாங்கிச்செல்கின்றனர்.

தடுப்பூசி போட்டால் தக்காளி இலவசம்

பொதுமக்களுக்கு தொடர்ந்து தக்காளியை கொடுக்க, வியாபாரிகள் நகராட்சி நிர்வாகத்திர்கு போதிய தக்காளிகளை தந்து உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள உத்வேகப்படுத்தவே இந்த முயற்சியை மேற்கொண்டோம். காய்கறி வியாபாரிகளும் இதை புரிந்துகொண்டு உதவி செய்தார்கள் என்று இலவசம் குறித்து சொல்லி இருக்கிறார் நகராட்சி அதிகாரி புருஷோத்தம் சல்லூர்.