இலை, தழைகளை கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 

இலை, தழைகளை கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இலை, தழைகளை கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் முகாமிட்டு அரைநிர்வாண போராட்டம், முழு நிர்வாண போராட்டம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இந்நிலையில் இன்று அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் தங்களின் உடலில் இலை தழைகளை கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் உர விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும், விவசாயத்திற்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், இலை தழைகளை கட்டிக்கொண்ட அரை நிர்வாணத்துடன் இருந்த விவசாயிகள் திருச்சியில் கரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் திருச்சி அண்ணாமலை நகர் பகுதியிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது. இதனால் விவசாயிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், காவல்துறை ஒரு வாரத்திற்குள் அனுமதி வழங்க வேண்டும் அப்படி எங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்காவிட்டால் மீண்டும் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.