ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போது நான் உடன்படவில்லை… தமிழருவி மணியன் பரபரப்பு

 

ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போது நான் உடன்படவில்லை… தமிழருவி மணியன் பரபரப்பு

காந்திய மக்கள் இயக்கத்தின் தமிழருவி மணியன் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், ‘’தமிழருவி மணியன் என்ற நேர்மையாளருக்கு என்ன அங்கீகாரத்தை அவர்கள் தந்து எந்த பதவியில் அமர்த்தி அழகு பார்த்தனர் என்று ஒரு பேட்டியில் விவேக் சொல்லி இருந்ததைக் கண்டு வியந்தேன். அவருக்கும் எனக்கும் அன்றுவரை நேரடி தொடர்பு இருந்ததில்லை. அதற்கு நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னேன்’’என்று தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போது நான் உடன்படவில்லை… தமிழருவி மணியன் பரபரப்பு

மேலும், ‘’ஒரு நாள் என்னை பார்த்து பேச என் வீட்டிற்கு அவர் வருவதாகச் சொன்னார். எதற்காக என்னை பார்க்க விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். ஒரு சிறிய குடியிருப்பு பெரிய வசதிகள் அற்ற நிலையில் வாழும் நான் பிரபலங்களின் வருகையை தவிர்த்து விடுவது என் வழக்கம். அவர்கள் வருகை மூலம் என்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் மலினமான மனநோய் என்றும் எனக்கு இருந்ததில்லை.

திரு. . விவேக்கை அவரது வீட்டில் நான் வந்து சந்திப்பதாக தெரிவித்து ஒருநாள் சாலிகிராமத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றேன். மனம் நெகிழ்ந்து வாசலில் நின்று வரவேற்றார். ஒரு மணி நேரம் இருவரும் பேசியபோது, அவருடைய பல்துறை அறிவாற்றலும் மனித நேயமும் சமூக நலனில் அவருக்கு இருந்த உண்மையான அக்கறை, தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலர வேண்டும் என்ற அவருடைய ஆவலும் என்னை வியப்பில் ஆழ்த்தின’’என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போது நான் உடன்படவில்லை… தமிழருவி மணியன் பரபரப்பு

’’விடைபெறும் நேரத்தில் அவருடைய சந்திப்பின் நினைவாக வைத்துக் கொள்ளும்படி ஒரு விலை உயர்ந்த பேனாவை எனக்களித்தார். அன்பைத் தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை என்று மறுத்துவிட்டேன். ஒரு புத்தகத்தையாவது பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லி முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று நூலை வழங்கினார்.

வெளிப்பூச்சு இல்லாத பாசாங்கற்ற அறிவார்ந்த ஒரு கலைஞனை அன்று நான் சந்தித்தேன். பொய்மையும் போலித்தனமும் மலிந்த அரசியலில் இருந்து முற்றாக நான் விலகிக் கொள்வதாக வெளியிட்ட அறிக்கையை வாசித்த விவேக், ஒரு பேனாவை கூட அடுத்தவரிடம் இருந்து பராமரிக்கும் ஒருவர் பொது வாழ்வில் இருந்து விலகுவது என்று எடுத்த முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று டுவிட் செய்து, உடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு விலக வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார்’’என்று குறிப்பிட்டுள்ளார் தமிழருவி.

ரஜினிகாந்த் என் வீட்டிற்கு வர விரும்பிய போது நான் உடன்படவில்லை… தமிழருவி மணியன் பரபரப்பு

’’ என் 50 ஆண்டு பொது வாழ்வின் அனுபவங்களை ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள் என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளேன். சென்ற ஆண்டு ஏப்ரலில் கொரோனாவால் வீட்டில் முடங்கி இருந்த விவேக் என்னுடைய ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கையை வசித்துக் கொண்டிருப்பதாக பதிவிட்டிருந்தார்.

கொரோனா கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும் நாம் அவசியம் தவிர்க்க வேண்டும். உங்களோடு நிறையப் பேச வேண்டும் என்றார். கருணையற்ற காலம் முடிவு அந்த அற்புதமான கலைஞனை, நெறி சார்ந்து வாழ்ந்த நல்லவனை, இயற்கையை நேசித்த இனிய பண்புகள் கொண்ட மனித நேயம் மிக்கவர் சிரிக்க வைத்து சிந்தனையை தூண்டிய அவரை நம்மிடமிருந்து பறித்துக் கொண்டது. நகைச்சுவை நடிகர்களில் துருவ நட்சத்திரமாக உறங்கியவர் விவேக். சாதாரண மனிதர்களின் சரித்திரம் அவர்கள் சாவோடு முடிந்துவிடும். நண்பர் விவேக் ஒரு சாதாரண மனிதராக வாழ வில்லை என்பதுதான் பொய்யும் நிழல் படாத உண்மை. ஆழ்ந்த துயரத்துடன் தமிழருவி மணியன்.’’என்று உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.