காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்… உதயநிதி ஆவேசம்

 

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்… உதயநிதி ஆவேசம்

திருமணம் செய்ய மறுத்தார் என்பதற்காக உளுந்தூர்பேட்டை அருகே சரஸ்வதி எனும் இளம்பெண்ணை மூவர் சேர்ந்து கொலை செய்துள்ள வன்முறை கடுமையாக கண்டிக்கத்தக்கது. பெண்ணின் தனிப்பட்ட விருப்பத்தை மிரட்டி மாற்றிவிடலாம் என நினைப்பதும், அதற்காக கொலை வரை செல்வதும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்கிற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் எழுத்துக்களில் ஆவேசம் தெறிக்கிறது.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்… உதயநிதி ஆவேசம்

அவர் மேலும், இத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். சரஸ்வதியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு தருவதோடு, பெண்களுக்கு எதிரான இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனி நடக்காதவாறு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தேவியாநந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி மகள் சரஸ்வதி(19). இவர் கடந்த 2ஆம் தேதி வீட்டின் அருகில் கழுத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்… உதயநிதி ஆவேசம்

திருநாவலூர் காவல் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சரஸ்வதியின் தந்தை வீரமணி புகார் அளித்ததன் பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வந்தார். விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ரங்கன் என்கிற ரங்கசாமி, சரஸ்வதியை கொலை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், சரஸ்வதியை நான் காதலித்து வந்தேன். ஆனால், சரஸ்வதியின் பெற்றோர் அவருக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடு செய்துவந்தனர். நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்றேன். அதனால் நீ வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று சொன்னதை கேட்காமல், பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை நான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னதால், துணியால் சரஸ்வதியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தேன் என்று தெரிவித்துள்ளார் ரங்கசாமி.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த ரங்கசாமியின் நண்பர் ரவீந்திரன், கிருஷ்ணசாமி உட்பட மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு உதயநிதி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.