ஸ்டாலின் அமைச்சரவையில் ‘மாஜி’க்கள் இத்தனை பேரா?

 

ஸ்டாலின் அமைச்சரவையில் ‘மாஜி’க்கள் இத்தனை பேரா?

ருணாநிதி அமைச்சரவையில் இருந்தவர்களில் ஸ்டாலின் அமைச்சரவையில் எத்தனை பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது என்பதுதான் திமுகவின் பரபரப்பாக இருக்கிறது.

90 சதவிகிதம் புதிய முகங்களுக்குத் தான் வாய்ப்பளிக்க வேண்டும் என்று ஐபேக் சொன்ன ஆலோசனையை தவிர்த்து பழைய முகங்களுக்கே திமுகவில் வாய்ப்பளிக்கப்பட்டது. இதில் கருணாநிதியின் அமைச்சரவையில் இருந்தவர்கள் பெரும்பாலானோர் இத்தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

ஸ்டாலின் அமைச்சரவையில் ‘மாஜி’க்கள் இத்தனை பேரா?

கருணாநிதியின் 2006 அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, ஐ. பெரியசாமி, கே. என். நேரு, தங்கம் தென்னரசு, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், பூங்கோதை, கீதாஜீவன், வெள்ளக்கோவில் சாமிநாதன், சுரேஷ்ராஜன், பெரியகருப்பன் தா. மோ. அன்பரசன் உள்ளிட்டோர் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டுள்ளனர்.

இவர்கள் அத்தனை பேரும் ஸ்டாலின் அமைச்சரவையிலும் மீண்டும் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் எத்தனை பேரை மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற வைக்கணும் என்பது பற்றி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார் ஸ்டாலின் என்கிறது அறிவாலயம் தரப்பு.

ஸ்டாலின் அமைச்சரவையில் ‘மாஜி’க்கள் இத்தனை பேரா?

வாக்குப் பதிவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் அனைத்து செய்தித்தாள்களிலும் திமுகவின் நில அபகரிப்பு உள்ளிட்ட திமுகவினர் மீது இருக்கும் வழக்குகள் பற்றி பட்டியலிடப்பட்டு வெளிவந்ததால் வழக்குகள் இருப்போருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கினால் பின்னர் நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் வழக்குகளின் பட்டியலையும் கருணாநிதி அமைச்சரவையில் இருந்தவர்களின் பட்டியல்களையும் வைத்து தீவிரமாக வடிகட்டி வருகிறாராம் ஸ்டாலின்.

பெரிய அளவில் சிக்கல்களை ஏற்படுத்தாத வழக்குகளில் இருப்போருக்கு மட்டும்தான் மீண்டும் அமைச்சரவையில் இடம் என்று சொல்கிறது அறிவாலயம். கடந்த 16ம் தேதியிலிருந்து இன்றைக்கு வரைக்கும் கொடைக்கானலில் ஓய்வெடுத்து வரும் ஸ்டாலின் இது பற்றி தான் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் சொல்கிறது அறிவாலய வட்டாரம் தகவல்.

ஸ்டாலின் அமைச்சரவையில் ‘மாஜி’க்கள் இத்தனை பேரா?

31 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை ஸ்டாலின் தயார் செய்துவிட்டதாகவும், ஸ்டாலில் தயார் செய்திருக்கும் 31 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலில், தங்களின் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முட்டி மோதுகிறார்களாம் கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்கள்.

அதே நேரத்தில், சீனியர்கள் சிலர் சொல்லி வரும் தகவல்களின் அடிப்படையில், திமுகவுக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சு திசைமாறி, ஸ்டாலின் அமைச்சரவையில் மாஜிக்கள் இத்தனை பேருக்கு வாய்ப்பு, அத்தனை பேருக்கு வாய்ப்பு என்று பேச்சு எழுந்திருக்கிறது கட்சியினர் மட்டத்தில்.