Home அரசியல் இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்

இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்

ஏப்ரல் 29ஆம் தேதி வரைக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் முன்னணி செய்தி நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளை அறிய ஆவலாக இருந்த கட்சிகள் அப்செட்டில் இருக்கின்றன. ஆனாலும் தங்களுக்கு சாதகமான சில தனியார் நிறுவனங்கள் மூலம் கருத்துக்கணிப்புகளை கேட்டு பெற்று வருகின்றன.

இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்
இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்

திமுகவுக்காக தேர்தல் பணிகள் செய்துவந்த ஐபேக் குழு பிரசாந்த் கிஷோர், தேர்தலுக்கு முன்பு வரை திமுக இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவது உறுதி என்று தொடர்ந்து சொல்லி வந்தார். தேர்தலுக்குப் பின்னரும் கூட அவர் 205 இடங்களில் திமுக வெற்றி பெறும் என்று சொல்லியிருக்கிறார்.

எந்த அடிப்படையில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்று திமுகவினரிடம் விசாரித்தபோது, வாக்குப்பதிவு நடந்த நாளன்று ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் பூத் ஏஜென்டுகளோடு ஐபேக் குழுவினரும் ஐக்கியமாகி இருக்கிறார்கள். அவர்கள் வாக்கு பதிவு செய்ய வந்தவர்களை மனக்கண்ணில் ஸ்கேன் செய்து இருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்

2011, 2016 சட்டமன்ற தேர்தலிலும் 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவுக்கு எத்தனை வாக்குகள் பதிவாகி இருக்கிறது? என்கிற தகவல்களின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டுதான் ஐபேக் குழுவினர் பூத் ஏஜெண்டுகளாக சென்றுள்ளனர். அந்த பட்டியலின் அடிப்படையில்தான் ஸ்கேன் செய்து வந்திருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்

கடந்த 2011, 2016 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் திமுகவிற்கு பதிவான வாக்குகள் மற்றும் ஏப்ரல் -6 அன்று நடந்த வாக்குப்பதிவில் நடத்திய ஸ்கேன், மேலும் திமுகவினரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரகசிய சர்வே ஆகியவற்றின் அடிப்படையில்தான் திமுக 205 இடங்களை கைப்பற்றும் என்று அழுத்தமாக சொல்லியிருக்கின்றனர் ஐபேக் குழுவினர் என்கிறார்கள்.

ஐபேக் அழுத்தமாக சொன்னதால்தான் ஸ்டாலினும் அமைச்சரவை பட்டியலை தயார் செய்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அடிப்படையில்தான் இரட்டை இலக்கத்தில் திமுக வெற்றி என்கிறது ஐபேக்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்: பரபரப்பான ஆட்டத்தில் சேப்பாக்கம் அணி த்ரில் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 11வது போட்டியில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம்: வழக்கிலிருந்து முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் விடுவிப்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முழு அடைப்புப் போராட்டமும், ஆா்ப்பாட்டமும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம்...

காமம் சார்ந்த படைப்புகள் எப்படி ஆபாச படங்களிலிருந்து வேறுபடுகின்றன? – இந்திய சட்டம் சொல்வது என்ன?

வெப் சீரிஸ் என்று கூறி இளம்பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், அந்தப் படங்களைத் தனியாக செல்போன் ஆப் (HotShots) ஒன்றை உருவாக்கி அதில் பதிவேற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது....

நடுரோட்டில் நெல்குத்திய பெண்கள்…தூத்துக்குடி பரபரப்பு

15 ஆண்டுகளாக போராடியும் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லாததால் தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து நூதன போராட்டம் நடத்தியுள்ளனர் பி.என்.டி. காலனி பகுதி மக்கள்.
- Advertisment -
TopTamilNews