கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

முன்னாள் தமிழக செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்து, கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் வழக்கினை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த இடைக்கால தடையையும் நீக்கியது சென்னை உயர்நீதிமன்றம். நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்க கிரிஜா வைத்தியநாதன் தகுதி இல்லை என்று கூற முடியாது. நிபுணத்துவ உறுப்பினரின் நிபுணத்துவம் என்பது நீர்த்துப் போக கூடாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வரும் 19ம் தேதி பதவியேற்கவிருந்தார். இந்த நிலையில்,கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கிரிஜா வைத்தியநாதனுக்கு சுற்றுச் சூழல் சார்ந்த துறையில் போதிய அனுபவம் இல்லை என்றும் அவரது பணி நியமன உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. அந்த மனுவை கடந்த 9ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுதாரர் தெரிவித்ததைப் போல சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், கிரிஜா நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து வழக்கை 16ம் தேதிக்கு (நேற்று) ஒத்திவைத்தனர்.

கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும் – ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில், நேற்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிஜா வைத்தியநாதன் நியமனம் தொடர்பாக சில ஆவணங்களை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்தன. அந்த ஆவணங்களை பார்த்த நீதிபதிகள், தீர்ப்பாயங்களில் நிபுணத்துவம் இல்லாத ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று கிரிஜா வைத்தியநாதன் தேசிய பசுமை தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக நியமிக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டிருக்கிறது ஐகோர்ட்.