சினிமாவின் சக்திவாய்ந்த ஊடகத்தை… எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்

 

சினிமாவின் சக்திவாய்ந்த ஊடகத்தை… எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன், திருமாவளவன், கனிமொழி எம்.பி, உதயநிதி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமாவின் சக்திவாய்ந்த ஊடகத்தை… எல்.முருகன், அண்ணாமலை இரங்கல்

’’மக்களின் அன்புக்குரிய, மக்களை சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தன் நடிப்பின் மூலம் நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த நடிகராக விளங்கிய நடிகர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி என்னை ஆற்றொன்னா துயரத்தில் ஆழ்த்திவிட்டது .
அவர்களை இழந்து வாடும் அவரது ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!ஓம் சாந்தி!’’என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

’’ஒரு நடிகரை விட, சின்னா கலைவாணர் விவேக் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்தார், அவர் மிகவும் முற்போக்கான எண்ணங்களை வெளிப்படுத்த சினிமாவின் சக்திவாய்ந்த ஊடகத்தை நுட்பமாக பயன்படுத்தினார். அவர் தனது கடைசி தசாப்தத்தை பசுமை கலாம் திட்டத்திற்கு ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு அர்ப்பணித்தார். அவர் நம்மீது மிக ஆழமான முத்திரையை வைத்திருந்தார்! ஓம் சாந்தி’’என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை.