பாசாங்குகளைக் கண்டித்தவர் விவேக்..கனிமொழி இரங்கல்

 

பாசாங்குகளைக் கண்டித்தவர் விவேக்..கனிமொழி இரங்கல்

நடிகர் பத்மஸ்ரீ. விவேக் அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கனிமொழி எம்.பி.

பாசாங்குகளைக் கண்டித்தவர் விவேக்..கனிமொழி இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அமமுக டிடிவி தினகரன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனிமொழி எம்.பியும் தனது இரங்கல் தெரிவித்துள்ளார்.