வருத்தம் தெரிவித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

 

வருத்தம் தெரிவித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

நடிகர் விவேக் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மாலை 5 மணிக்கு சென்னை மேட்டுக்குப்பத்தில் தகனம் செய்யப்படுகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு பொதுமக்களும், ரசிகர்களும், திரைக்கலைஞர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வருத்தம் தெரிவித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், ’’பத்மஸ்ரீ டாக்டர் விவேக் காலமானதைப் பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சினிமாவில் அவரது சிறந்த நடிப்பு, இயற்கையின் மீதான அக்கறை மற்றும் ஒரு சமூக ஆர்வலராக அவர் மதிக்கப்படுவார். துயரமடைந்த குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்’’என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.