முன்ஜாமீன் கேட்கும் கே.என்.நேரு

 

முன்ஜாமீன் கேட்கும் கே.என்.நேரு

திமுக முதன்மைச்செயலாளரும், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான கே.என்.நேரு மீது திருச்சி மாவட்ட முசிறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அவர் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

முன்ஜாமீன் கேட்கும் கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தலில் கட்சி்யினருக்கு பணப்பட்டுவாடா செய்ததை பற்றி தனது ஆதரவாளர்களும் நேரு பேசிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், ’’ஒவ்வொரு ஓட்டுக்கும் தலா 200 ரூபாய் கொடுக்கப்பட்டதா?’’ என்று கேட்க, அந்த அறையிலில் இருப்பவர்கள், ’’ 200 கொடுத்திட்டோம். ஆனா, அவுங்க 500 ரூபாய் கொடுக்குறாங்க’’என்று சொல்ல, ’’அவன் 500 கொடுக்குறானா..? அது தேறாது.. தேறாது..’’என்று சொல்கிறார் நேரு.

முன்ஜாமீன் கேட்கும் கே.என்.நேரு

அப்போது ஒருவர், ’’அவுங்க 500 கொடுத்தா நாமலும் 500 கொடுப்போம். அவுங்க 1000 கொடுத்தா நாமளும் 1000 கொடுப்போம்’’என்று சொல்ல, ‘’அவன் …நக்குனா நீயும் நக்குறியா?’’என்று ஆபாசமாக பேசிய நேரு, ‘’பணம் கொடுக்குறதுல ஏதாவது பிரச்சனை வந்தா அடிச்சு மண்டையை உடைச்சுடுவேன்’’என்று ஆவேசம் காட்டினார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தான் நேரு முன் ஜாமீன் கேட்கிறார். நேருவின் முன் ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.