’’அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர்..’’அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

 

’’அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர்..’’அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்கச் சென்றிருக்கிறார்.

’’அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர்..’’அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

இதுகுறித்து தமிழக பாஜக பிரமுகர் காயத்ரிரகுமாம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’தேர்தலுக்காக வெய்யில் மழை என்று பாராமல் கொரானாவுக்கு அஞ்சாமல் திமுகவுக்கு உழைத்த தொண்டன் கொத்தடிமையாகவே கிடக்க, அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். பிரதமர் மோடியும் தேர்தல் வேலைதான் பார்த்தார் இருந்தும் இன்றும் உழைத்து கொண்டிருக்கிறார். யார் மக்களுக்கான தலைவர் என சிந்தியுங்கள் அடிமைகளே?’’என்று கேட்கிறார்.

’’அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர்..’’அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக

தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவருவதற்கு முன்பாகவே, அதுவும் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக பிரமுகர் ஒருவர், ’’அதிகாரத்தை சுவைக்க போகும் தலைவர்..’’என்று ஸ்டாலினை சொல்லி இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவினரையோ அதிரவைத்திருக்கிறது.