கடைசி நேரத்தில் கமல் செய்த உதவி..நெகிழும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி

 

கடைசி நேரத்தில் கமல் செய்த உதவி..நெகிழும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி

துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற, சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

கடைசி நேரத்தில் கமல் செய்த உதவி..நெகிழும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி

மாற்றுத்திறனாளிகளுக்கு முதன்முறையாக டி. பி. எல் போட்டி துபாய் நாட்டில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்றது. போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை சூப்பர் ஸ்டார் என்ற அணியாக சென்று விளையாடினர்.

கடைசி நேரத்தில் கமல் செய்த உதவி..நெகிழும் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணி

போட்டிக்கு செல்ல கடைசி நேரத்தில் வீரர்களுக்கு வர வேண்டிய உதவி வரவில்லை. அதனால் போட்டிக்கு எப்படி செல்வது என்று தவித்துக் கொண்டிருந்தவர்கள், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கோவையில் இருப்பதை அறிந்து, அங்கே சென்று சந்தித்து தங்களது பிரச்சனையை கூறினர். அப்போது ஊன்றுகோல் உதவியுடன் நடந்து கொண்டிருந்த கமலஹாசன், இந்த 18 வீரர்களும் எப்படி விளையாடுவார்கள் உண்மையிலேயே ஆர்வமுடன் இருக்கிறார்களா என்பதை விசாரித்து அவர்கள் விளையாடும் வீடியோவையும் வாங்கி பார்த்தார். அதன் பிறகு தன்னால் ஆன உதவியைச் செய்கிறேன் என்று சொல்லி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

அடுத்த நாளே அவர்களுக்கு உதவி கிடைத்து விட்டது. துபாய் போட்டிக்கு செல்ல டிக்கெட் மற்றும் விசா சென்னை சூப்பர் ஸ்டார் அணியில் உள்ள மொத்தம் 23 பேருக்கும் உடனடியாக மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. இந்த உதவியை மாற்றுத்திறனாளிகள் தமிழக கிரிக்கெட் வீரர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளனர்
.

கமல் தங்களுக்கு செய்த உதவியையும் வெற்றி பெற்ற பின்பு தங்களுக்கு அவர் பாராட்டி தெரிவித்ததையும் என்றென்றைக்கும் மறக்க மாட்டோம் என்று சொல்லி நெகிழ்கிறார் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் தலைவர் மற்றும் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் துணை தலைவர் சச்சின் சிவா.