விஜய்க்கு திமுக சொன்ன அட்வைஸ்

 

விஜய்க்கு திமுக சொன்ன அட்வைஸ்

தேர்தல் அன்று நடிகர் விஜய் ஓட்டு போட சைக்கிளில் வந்தது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு அல்லாமல் டுவிட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. இதை தொடர்ந்து சன் டிவியில், பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு எதிராகத்தான் விஜய் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டார் என்று செய்தி வந்தது. சன் டிவியை தொடர்ந்து திமுகவினரும் இதையே சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

விஜய்க்கு திமுக சொன்ன அட்வைஸ்

அதுமட்டுமல்லாமல் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணிக்கு அதிருப்தி தெரிவித்து வந்தார் விஜய். அதனால்தான் அவர் கருப்பு சிகப்பு சைக்கிளில் வந்தார் என்று வலைதளங்களில் பரப்பி வந்தனர் திமுகவினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் விஜய் சைக்கிளில் வந்திருக்கலாம் என்று தன் பங்கிற்கு கொளுத்தி போட்டார்.

ஆனால் விஜய் தரப்பு, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடம் குறுகலான இடம் என்பதால் அங்கே காரை நிறுத்துவதில் சிரமம் இருக்கிறது என்பதாலும், வாக்குச்சாவடி வீட்டிற்கு அருகில் இருப்பதாலும் விஜய் சைக்கிளில் ஓட்டு போட சென்றாரே தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்றது . ஆனால் இது உதயநிதி பார்த்த தான் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

விஜய்க்கு திமுக சொன்ன அட்வைஸ்

திமுக தலைவர் ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளில் சென்று பயிற்சி பெறுவது ஊடகங்களில் வெளியாகி மிகவும் பரபரப்பை தந்தது. ஸ்டாலினுக்கு நல்ல இமேஜையும் தந்திருக்கிறது என்று திமுகவினரால் நம்பப்படுகிறது. அப்படி இருக்கும்போது விஜய்யும் சைக்கிளில் வந்து ஓட்டு போட்டால் அது பெரிய மாஸாக இருக்கும். விஜய்க்கு ஒரு நல்ல பெயரை கொடுக்கும் என்று தனது நண்பர்கள் மூலமாக உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு அறிவுறுத்தி இருக்கிறாராம்.

அதை கேட்டுத்தான் விஜய்யும் சைக்கிளில் வந்ததாகவும், சைக்கிளில் வர வைத்து விட்டு, நல்ல இமேஜ் கிடைக்கும் , செம மாஸ்-ஆக அமையும் என்று அவரை உசுப்பேற்றி சைக்கிளில் வர வைத்துவிட்டு, பிஜேபிக்கு எதிராக விஜய்.. என்று பிரச்சாரம் செய்வதற்காக உதயநிதி வகுத்த திட்டம் தான் அது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.