’மயிரிழையிலும் கூட..’முதல்வருக்கு வந்த ரிப்போர்ட்

 

’மயிரிழையிலும் கூட..’முதல்வருக்கு வந்த ரிப்போர்ட்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பல்வேறு தரப்பினரிடம் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், அதை எல்லாம் வைத்து பார்க்கும்போது அதிமுக கூட்டணி 130 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிகிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

’மயிரிழையிலும் கூட..’முதல்வருக்கு வந்த ரிப்போர்ட்

கூட்டணியில் இருக்கும் பாமக நிறுவனர் ராமதாசும் இதையேதான் சொல்லி எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறாராம். தவிர சுனிலிடமும் எலக்சன் ரிப்போர்ட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் சுனில், வாக்குப்பதிவுக்கு பின்னர் அவரிடம் நடத்திய ஆலோசனையில், முதல்வரிடம் அவர் ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார். அந்த ரிப்போர்ட்டில், அதிமுக கூட்டணிக்கு 90 தொகுதிகள் வரைக்கும் கிடைப்பது 100 சதவீதம் உறுதி. மேலும் 27 தொகுதிகளில் இழுபறி இருக்கிறது.

அந்த 27 தொகுதியிலும் வெற்றி வித்தியாசம் அல்லது தோல்வி வித்தியாசம் சில ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நூற்றுக்கணக்கில் கூட வாக்கு வித்தியாசம் இருக்கும். இந்த 27 தொகுதியிலும் மயிரிழையிலும் கூட வெற்றி, தோல்வி இருக்கும் என்று அவர் சொல்லி இருக்கிறார்.

அந்த 27 தொகுதிகளால் முதல்வர் படு டென்சனில் இருப்பதாக தகவல்.