எடப்பாடி போல் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட இலாகா! துரைமுருகன் அதிர்ச்சி

 

எடப்பாடி போல் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட இலாகா! துரைமுருகன் அதிர்ச்சி

திமுகதான் அடுத்து ஆட்சிக்கு வருகிறது என்கிற அதீத நினைப்பிலேயே அறிவாலயத்தில் அமைச்சர்கள் பட்டியல் தயாராகிவருகிறது. இதனால் திமுகவின் சீனியர்கள் பலரும் தங்களுக்கு எந்த இலாகா வேண்டும் என்பதை சீட்டு எழுதி ஸ்டாலினுக்கு கொடுத்து வருகின்றனர் என்று தகவல். சிலர் தங்களுக்கு கருணாநிதி அமைச்சரவையில் இருந்த இலாகாவே வழங்கப்படும் என்கிற நினைப்பில் இருக்கின்றனர்.

எடப்பாடி போல் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட இலாகா! துரைமுருகன் அதிர்ச்சி

சீனியரான துரைமுருகனும் தனக்கு முன்பு இருந்தது போலவே பொதுப்பணித்துறையினர் ஒதுக்கப்படும் என்று நம்பி இருந்திருக்கிறார். ஆனால் சட்டத்துறையை ஸ்டாலின் தனக்கு ஒதுக்க இருப்பதை கேள்விப்பட்டு அவர் அதிர்ந்து போய் இருக்கிறார்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். துரைமுருகன் மீது ஏற்பட்ட சில அதிருப்திகளின் காரணமாக பொதுப்பணித்துறை தன்வசம் வைத்துக்கொண்டு, சட்டத்துறையை அவருக்கு கொடுத்திருந்தார் கருணாநிதி அந்த சட்டத் துறையையே இப்போது துரைமுருகனுக்கு வழங்க இருக்கிறாராம் ஸ்டாலின்.

எடப்பாடி போல் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட இலாகா! துரைமுருகன் அதிர்ச்சி

கருணாநிதி செய்ததையே ஸ்டாலினும் செய்வதா? என்று துரைமுருகன் தரப்பில் புலம்ப, துரைமுருகன் ஏற்கனவே முதுமையினால் அவதியுற்று வரும் நிலையில் கொரோனாவின் காரணமாகவும் அண்மையில் மிகவும் நலிவுற்று இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு பொதுப்பணித்துறை வழங்கினால் மிகவும் சுமையாக இருக்கும் என்று கருதிதான் சட்டத்துறை அவருக்கு வழங்குவதாக ஸ்டாலின் தரப்பு சொல்கிறது.

அப்படியானால் அந்த இலாகாவை யாருக்கு வழங்க போகிறார் என்று ஆவலுடன் கேட்ட துரைமுருகனுக்கு அடுத்த அதிர்ச்சி. அந்த இலாகாவை ஸ்டாலினே வைத்துக் கொள்வதாக முடிவெடுத்திருக்கிறாராம். எடப்பாடி பழனிச்சாமி பழனிச்சாமியை போல் ஸ்டாலினும் பொதுப்பணித் துறையை தானே வைத்துக் கொள்ள முடிவெடுத்து இருப்பது கண்டு அதிர்ந்து போயிருக்கிறார் துரைமுருகன்.