’’வேலுமணியும் பழனிச்சாமியும் கலந்தாலோசித்து…’’

 

’’வேலுமணியும் பழனிச்சாமியும் கலந்தாலோசித்து…’’

1979ம் ஆண்டில் தந்தை பெரி்யாரின் நூற்றாண்டை முன்னிட்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு ஈ.வெ.ரா. சாலை என்று பெயர் சூட்டினார். இத்தனை ஆண்டுகளூக்குக் பின்னர், தற்போது திடீரென்று பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த பெயரான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் ரோடு என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

’’வேலுமணியும் பழனிச்சாமியும் கலந்தாலோசித்து…’’

இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ’’சென்னை பெரியார் சாலைக்கு Grand Western Trunk Road-அண்ணா சாலைக்கு Grand Southern Trunk Road-காமராஜர் சாலைக்கு Grand Northern Trunk Road என பெயர் மாற்றம் செய்துள்ளது அடிமை அரசு. எதிர்ப்புகள் வரவே, மாநகராட்சி-நெடுஞ்சாலை பதிவுகளில் பெயர்கள் வெவ்வேறாக உள்ளதென வினோத விளக்கம் தருகிறது.

வேலுமணியின் உள்ளாட்சித்துறையும் – பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையும் கலந்தாலோசித்து சாலைகளுக்கு தலைவர்கள் பெயரை தொடர செய்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாமல் கல்லாக்கட்டும் அவசரத்தில் தேர்தலுக்கு முன்பே டெண்டர் விட்டு இந்த பெயர் குளறுபடியை அரங்கேற்றியுள்ளனர்.

ஆட்சி முடியப்போகும் இந்நேரத்தில்கூட முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த அடிமைகள் முழு சங்கியாகவே மாறிவிட்டனர். எங்களின் உணர்வோடு கலந்துள்ள தலைவர்களின் பெயர்களை நீக்குவது என்பது தமிழர்களின் தன்மானத்தை சீண்டிப்பார்க்கும் விஷயம். இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.