ஸ்டாலின் பழைய வழக்கு: தூசு தட்டி எடுத்த பாஜக

 

ஸ்டாலின் பழைய வழக்கு: தூசு தட்டி எடுத்த பாஜக

கொளத்தூர் தொகுதியில் 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் சைதை துரைசாமியை தோற்கடித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். சைதை துரைசாமியும், ஸ்டாலினும் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதற்கொண்டு முன்னிலையில் இருந்து வந்தனர். கடைசி வரைக்கும் டென்ஷனாகவே போய்க்கொண்டிருந்தது வாக்கு எண்ணிக்கை. கடைசி நேரத்தில் இரண்டு ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஸ்டாலின் பழைய வழக்கு: தூசு தட்டி எடுத்த பாஜக

இதனால் அதிகார துஷ்பிரயோகம் செய்து தான் ஸ்டாலின் வெற்றி பெற்றார் என்று சைதை துரைசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 2017 ஆம் ஆண்டு தான் ஸ்டாலினுக்கு எதிரான குற்றச் சாட்டில் ஆதாரம் இல்லை என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். அதற்குள் ஸ்டாலின் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதை எதிர்த்து சைதை துரைசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் எந்த அசைவும் இல்லாமல் அப்படியே இருந்ததால், சைதை துரைசாமியும் அதை அப்படியே விட்டு விட்டார்.

ஸ்டாலின் பழைய வழக்கு: தூசு தட்டி எடுத்த பாஜக

இந்நிலையில் தற்போதைய தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவது மாதிரியான ஒரு சூழல் இருப்பதால், ஸ்டாலினின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதை அறிந்த பாஜக, அதை தூசி தட்டி எடுத்து இருக்கிறது. இந்த வழக்கு நிலுவையில் இருப்பதை ஒருவர் சுட்டிக் காட்ட, சம்பந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்ல, சைதை துரைசாமிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.

இதையடுத்து சைதை துரைசாமி தரப்பில், ஏப்ரல் 11ம் தேதி மென்ஷனிங் அப்பிளிகேஷன் என்ற வகையில் ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரிக்க தேவையான முகாந்திரங்கள் இருப்பதாக சுட்டிக் காட்டி வழக்கை விரைவாக விசாரிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. திமுக தரப்பினரோ இந்த வழக்கை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள். சட்ட ரீதியான முக்கியத்துவம் இதற்கு இருக்காது என்று அவர்கள் தரப்பு சொல்கிறது.