மாலத்தீவில் ஓய்வெடுக்கப்போகும் ஸ்டாலின்

 

மாலத்தீவில் ஓய்வெடுக்கப்போகும் ஸ்டாலின்

திமுகவில் ’விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்று முதன்முதலாக பிரச்சாரத்தை தொடங்கியவர் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அவர் மற்ற தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

மாலத்தீவில் ஓய்வெடுக்கப்போகும் ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களமிறங்கிய ஸ்டாலினும், ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்று தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தேர்தல் முடிந்து வாக்குப் எண்ணிக்கைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பதால் அவர் வெளிநாடு சென்று ரிலாக்ஸ் செய்து விட்டு வரலாம் என்று ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைக்க போகிறது என்று ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் நம்புவதால், ஆட்சி அமைத்த பிறகு ஓய்வு இல்லாமல் போய்விடும். அதனால் கிடைத்த இந்த இடைவெளியில் வெளிநாடு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் வெளிநாடு மாலத்தீவு.

மாலத்தீவினை தேர்ந்தெடுக்க காரணம், மற்ற நாடுகளில் எல்லாம் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் மாலத்தீவு தான் ஓரளவு கட்டுப்பாடு தளர்வுடன் இருக்கிறது. அதனால் மாலத்தீவு சென்று ஓய்வெடுத்துவிட்டு அங்கிருந்தபடியே தமிழக அமைச்சரவை பட்டியலையும் தயார் செய்து விடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வரும் நிலையில் தீவிற்கு செல்ல சில நிபந்தனைகள் இருக்கின்றன.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் சோதனை நடத்திய பரிசோதனை மையத்தின் தெளிவான முகவரி அனைத்தும் மாலத்தீவு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் மாலத்தீவு தலைநகரம் சென்ற பின்னரும் கூட ஒரு பிசிஆர் டெஸ்ட் எடுக்க வேண்டும். இத்தனை பயண கட்டுப்பாடுகளுடன் சென்றுவிட்டு மீண்டும் இந்தியா திரும்பும் போதும் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாகி விடும்.

இருக்கின்ற 15 நாட்களில் இத்தனை கட்டுப்பாடுகளுடன் சென்று வர வேண்டியது அவசியம்தானா என்றும் ஸ்டாலின் யோசித்து வருகிறாராம்.