மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

 

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

முடிவு தெரிய இன்னும் 15 நாட்கள்தான் இருக்கிறது என்றாலும், அதற்குள் அவரா? இவரா? என்ற அலசல் ஒவ்வொரு தொகுதி மக்களிடையேயும் இருக்கத்தான் செய்கிறது. வாக்காளர்கள் தங்களுக்குள்ளாகவே கள நிலவரத்தை கொண்டு அவர்களாகவே ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

திமுக சிட்டிங் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரனா? மாஜி அமைச்சர் பி.வி.ரமணாவா? என்று பரபரத்துக்கிடக்கிறது திருவள்ளூர். சென்னை மாநகரத்தை ஒட்டியிருக்கும் தொகுதி என்பதால் இத்தொகுதி அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது.

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

சென்னைக்கு அருகில் உள்ள தொகுதி என்றாலும் இது விவசாய பூமி. தொழிற்பேட்டை இருந்தாலும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்ட தொகுதிகளில் திருவள்ளூர் தொகுதி்யும் ஒன்றாக இருக்கிறது. அதனால்தான் சுதந்திரத்திற்கு பிறகான முதல் தேர்தலில் ’விவசாயிகள் மஸ்தூர் கட்சி்’தான் வெற்றி பெற்றிருக்கிறது. 1951 தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்து 57, 62 தேர்தல்களில் காங்கிரஸ் இத்தொகுதியை கைப்பற்றியது. 67, 71ல் திமுக தன் வசம் வைத்திருந்தது இத்தொகுதியை.

அதன்பின்னர் 6 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், காங்கிரஸ் 2 முறை, தமாகா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கின்றன. திமுகவும் அதிமுகவும்தான் மாறி மாறி வருகின்றன. 77,80,84 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் அதிமுகவின் கோட்டை என்ற பேச்சும் வந்தது.

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

ஆனால் 89ல் திமுக இத்தொகுதியை கைப்பற்றியது. 89ல் இருந்து 2016 வரைக்கும் ஒருமுறை திமுக வந்தால் அடுத்த முறை அதிமுகதான் வந்திருக்கிறது. அதிமுக- திமுக- அதிமுக- திமுக என்று மாறி மாறி வரும் சென்ட்டிமெண்ட் படி இந்த முறையும் அதிமுகதான் வெற்றி பெறும் என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால் திமுக தரப்பின் பேச்சு வேறாக இருக்கிறது. அதற்கு காரணமாக ரமணாவுக்கு இருக்கும் சில மைனஸ் பாயிண்ட்களை முன்வைக்கின்றனர்.

2006 தேர்தலில் பி.ரமணா, 55,454 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அத்தேர்தலில் 64,378 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சிவாஜி வெற்றி பெற்றார். 2011 தேர்தலிலும் மீண்டும் பி.ரமணாவுக்கே வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அத்தேர்தலில் அவர் 91,294 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று அமைச்சரும் ஆனார்.

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

2006ல் 8,924 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக சிவாஜியிடம் தோல்வி அடைந்த ரமணா, 2011ல் 23,760 வாக்குகள் வித்தியாசத்தில் சிவாஜியை வீழ்த்திய ரமணா மீது எழுந்த பல்வேறு புகார்களின் காரணமாக அவர் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் 2016ல் பாஸ்கரனுக்கு வாய்ப்பு வழங்கியது அதிமுக.

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

மைனஸ் பாயிண்டுகள்:

  1. பாஸ்கரனுக்கு வாய்ப்பு வழங்கியதால் ரமணாவும் அவரது ஆதரவாளர்களும் பாஸ்கரனுக்கு வேலை பார்க்கவில்லை. இந்த ஆத்திரத்தில் தற்போது பாஸ்கரனும் அவரது ஆதரவாளர்களும் ரமணாவுக்கு வேலை பார்க்கவில்லை. பாஸ்கரன் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர். தலித் சமூகத்திற்கு அடுத்தபடியாக வன்னிய சமூக மக்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஓட்டுக்கள் எல்லாம் ரமணாவுக்கு செல்ல வாய்ப்பில்லை.
  2. கோ.அரி திருவள்ளூர் தொகுதியை சேர்ந்தவர். அவருக்கு திருத்தணியில் சீட் கொடுத்துவிட்டதால் அவரும் அவரது ஆதரவாளர்களும் திருத்தணி தொகுதியில் முகாமிட்டு வேலை செய்து வந்தார்கள். அதனால அவர்களின் கவனம் எல்லாம் திருத்தணி தொகுதியின் மேல்தான் இருந்து வந்தது. எங்கே சென்றாலும் ஓட்டுப்போட சொந்த தொகுதிக்கு வந்திருப்பார்களே என்றால், அதுவும் சந்தேகம்தான் என்கிறார்கள். திருத்தணியில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அரி ஆதரவாளர்கள் நின்றிருந்தால் இங்க எப்படி வந்து ஓட்டு போட்டிருப்பார்கள். அதனால் அவரது கேன்வாசிங்கும் மிஸ்சாகிவிட்டது. ஓட்டுக்களும் மிஸ்சாகிவிட்டது என்கிறார்கள்.
  3. ரமணா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த சமூகத்தின் ஓட்டுக்கள் எல்லாம் அவருக்கு அப்படியே போய்விட வாய்ப்பில்லை. வி.ஜி.ராஜேந்திரன் முதலியார் என்றாலும், அவரது மனைவி நாயுடு. அதனால்தான் எலெக்‌ஷனில் கணவருக்காக நாயுடு சமூகத்தினரிடம் தீவிரமாக வாக்கு சேகரித்திருக்கிறார். அதனால் நாயுடு சமூகத்தின் வாக்குகள் திமுகவுக்கும் போய்ச்சேர்ந்துவிடும் என்கிறார்கள்.
  4. தலித் சமூகத்தினர்தான் இத்தொகுதியில் அதிகம். அதனால் இத்தொகுதி்யில் சர்ச் அதிகம். பாஜகவுக்கு ஓட்டு போடக்கூடாது என்று ஒவ்வொரு சர்ச்சிலும் உத்தரவு போடப்பட்டிருக்கிறதாம். அதனால் அந்த ஓட்டுக்கள் எல்லாம் திமுகவுக்குத்தான் வந்திருக்கும் என்கிறார்கள். இப்படி பல மைனஸ் பாயிண்டுகள் இருப்பதால் பி.வி.ரமணா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திப்பார் என்கிறார்கள்.
  5. அதிமுகதான் முதலில் பணம் விநியோகம் செய்தாலும் அப்பணம் முழுமையாக எல்லோருக்கும் சென்று சேரவில்லை. ஆனால், திமுகவோ கல்லூரி மாணவர்களை கொண்டு வீடு வீடாக சென்று பணத்தை சேர்த்திருக்கிறார்கள். இதனால் அந்த வாக்குகள் எல்லாம் சிந்தாமல் சிதறாமல் வந்து சேர்ந்துவிடும் என்று கணக்கு போடுகிறார்கள்.
  6. வி.ஜி.ராஜேந்திரன் திட்டமிட்டு, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஷெட்யூல் போட்டுக்கொடுத்து கட்சியினரை களப்பணியாற்ற வைத்திருக்கிறார். இது திமுகவுக்கு நல்ல சாதகமாக அமையும் என்கிறார்கள் அக்கட்சியினர்.
  7. ஓட்டு மெசினில் முதலில் இருப்பது உதயசூரியன் சின்னம்தான். மூன்றாவது இடத்தில்தான் இரட்டை இலை இருந்தது. புதிய வாக்காளர்கள் பலரும் தேடிப்பிடித்து வாக்களிக்க விரும்பாதவர்கள், முதலில் இருக்கும் சின்னத்தை தான் அழுத்தி இருப்பார்கள். முதலில் சின்னம் இருந்ததால் அதிமுகவுக்கு அது மைனஸ்தான் என்கிறார்கள் திமுகவினர்.
மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

பிளஸ் பாயிண்டுகள்:

மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்
  1. திருவள்ளூர் தொகுதியில் 2,74,689 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 1,33,608 ஆண் வாக்காளர்களும், 1,41,55 பெண் வாக்காளர்களும் உள்ளனர். ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்ற அறிவிப்பு ஒன்று போதும். பெண்கள் வாக்கு மொத்தமும் அதிமுகவுக்குத்தான் வந்திருக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர்.
  2. தலித் சமூகத்திற்கு அடுத்தபடியாக வன்னியர், நாயுடு, முதலியார், ரெட்டியார் சமூகத்தினர் இருந்தாலும் தலித் சமூகத்தினரே இத்தொகுதியில் அதிகம். ஆனாலும் 2016 தேர்தலில் விசிக இத்தொகுதியில் தனித்து நின்றபோது 7,006 வாக்குகள்தான் பெற்றது. அதனால் திமுகவுடன் விசிக கூட்டணி வைத்திருப்பதால் தலித் மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் 7 ஆயிரம் ஓட்டுகள் அளவுக்குத்தான் திமுகவுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் அதிமுகவினர்.
  3. 2016 தேர்தலில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த பாஸ்கரன் போட்டியிட்டு 75,33 ஓட்டுக்கள் வாங்கினாலும், 31,935 வாக்குகள் பெற்று பாமகதான் மூன்றாவது இடத்திற்கு வந்தது. அதனால் பாமக அதிமுகவில் இருப்பதால் ஓட்டுக்கள் அப்படியே அதிமுகவுக்குத்தான் வந்து சேரும் என்கிறார்கள்.
    இஸ்லாமியர்கள் இத்தொகுதியில் குறைவாகவே இருக்கிறார்கள்.
  4. பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடக்கூடாது என்று சர்ச்சில் உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரும் அதிமுகவுக்கு எதிராக திரும்ப மாட்டார்கள். அதே நேரம் 2016 தேர்தலில் தனித்து நின்ற பாஜகவுக்கு 1,826 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அந்த எண்ணிக்கை இப்போது நிச்சயம் உயர்ந்து அதிமுகவுக்கு வந்திருக்கும் என்கிறார்கள்.
  5. செண்டிமெண்ட் படி பார்க்கும்போது கடந்த முறை திமுக வந்திருக்கிறது என்பதால் இந்த முறை அதிமுக கன்பார்ம் என்கிறார்கள் அக்கட்சியினர்.
  6. முதல்வரின் தாயாரை பற்றி ஆ.ராசா பேசியது மக்களை வெறுப்படைய வைத்து அது அதிமுகவுக்கு சாதகமாகியிருக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர். ஆனால் திமுகவினரோ, ஆ.ராசா பேசிவிட்டார் என்பதற்காக திமுககாரன் ஓட்டை மாற்றி போட்டுவிடுவானா என்ன? பேசியிருக்க கூடாது என்று சொல்லுவானே தவிர, அதுவும் கூட சிட்டி்யில்தான் அந்த பேச்சை எல்லாம் கணக்கில் எடுத்துக்குவாங்க. கிராமங்களில் அதுக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். ஆனால், அதிமுகவினரோ கிராமங்களில்தான் தாயைப்பற்றி, பெண்களைப்பற்றி இழிவாக பேசியதை பெண்கள் சகித்துக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் திமுக பெண்களின் ஓட்டுக்களும் அதிமுகவுக்குத்தான் வந்திருக்கும் என்கிறார்கள்.
மாஜிக்கு பாதகமான மைனஸ் பாயிண்ட்கள் சிட்டிங்குக்கு சாதகமாகுமா? திருவள்ளூர் ’அத’களம்

அதிமுக – திமுக அல்லாத பொதுவானவர்களோ, சிட்டிங் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் கூட 5 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. இந்த 5 ஆயிரம் ஓட்டுக்களும் அப்படியே மாறிப்போலும் போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பேசிக்கொள்கிறார்கள்.