ஓபிஎஸ் தந்த அதிர்ச்சி; ஆறுதல் சொன்ன ராமதாஸ்

 

ஓபிஎஸ் தந்த அதிர்ச்சி; ஆறுதல் சொன்ன ராமதாஸ்

அதிமுக- திமுக இரண்டு கட்சிகளுக்குமே இரண்டு விதமான ரிப்போர்ட்கள் வந்து கொண்டிருப்பதால் இரு கட்சி தலைவர்களும் குழப்பத்தில்தான் இருக்கிறார்கள். இதனால் தொண்டர்கள் மத்தியிலும் இதே குழப்பம் தான் நீடிக்கிறது.

ஓபிஎஸ் தந்த அதிர்ச்சி; ஆறுதல் சொன்ன ராமதாஸ்

எக்ஸிட் போல் மூலம் கிடைத்த ரிசல்ட்டை எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. அதில் பத்து சதவிகிதம் அளவுக்குத்தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்ததை கண்டு, அதிர்ச்சி அடைந்த எடப்பாடி, ஓபிஎஸ்க்கு போன் போட்டு சொல்ல, எனக்கும் அப்படித்தான் ரிசல்ட் வந்திருக்குது என்று சொல்ல, வாங்க இதுபற்றி பேசலாம் என்று ஓபிஎஸ்சை ஆலோசனைக்கு அழைக்க, கடந்த நாலு வருஷமா எல்லா முடிவுகளையும் நீங்கதானே எடுக்குறீங்க. இப்பவும் நீங்களே அந்த முடிவு எடுத்துக்குங்க என்று சொல்லி ஆலோசனைக்கு வருவதை தவிர்த்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

ஓபிஎஸ் தந்த அதிர்ச்சி; ஆறுதல் சொன்ன ராமதாஸ்

இதன்பின்னர், உளவுத்துறையின் ரிப்போர்ட்டை வைத்து பாமக ராமதாஸ் இடம் பேசியபோதும் கவலையை தெரிவித்திருக்கிறார் எடப்பாடி. ஆனால் ராமதாஸ், பாமக ஓட்டு அதிமுகவுக்கும் அதிமுக ஓட்டு பாமகவுக்கும் தப்பாமல் வந்து இருக்கிறது. அதனால் 130 முதல் 150 இடங்கள் வரைக்கும் நம்ம கூட்டணிக்கு கிடைக்கும். மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வருகிறது என்று பாசிட்டிவாக பேசி ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

ஓபிஎஸ் தந்த அதிர்ச்சி; ஆறுதல் சொன்ன ராமதாஸ்

உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட், ராமதாஸ் சொன்ன பாஸிட்டிவ் ரிப்போர்ட் இரண்டையும் வைத்து தனது தேர்தல் ஆலோசகரான சுனில் தரப்பிடம் எடப்பாடி ஆலோசித்த போது, அவர்கள் இரண்டு ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள். மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் ஓட்டுப் போடுவது வழக்கம் தான். ஆனாலும் கடைசி நேரத்தில் நாம் வெளியிட்ட விளம்பரங்களும் அறிவிப்புகளினாலும் வாக்காளர்கள் திருப்தியில் இருக்கிறார்கள். அதனால் 120 சீட்டு வரைக்கும் கிடைக்கப்போவது கன்பார்ம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துடும்னு நம்பிக்கையாக இருக்கலாம் என்று சொல்லி விட்டு, சிலவற்றை வைத்து பார்க்கும்போது, அதிமுகவுக்கு 50 சீட்டிலிருந்து அதிகபட்சமாக 80 வரைக்கும் தான் கிடைக்கும் போலிருக்கிறது என்று இரண்டு ரிப்போர்ட்டை சொல்லி இருக்கிறார்கள்.

இந்த இரண்டில் எதை நம்புவது என்று குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி.