கொரோனா நோயாளிகள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி: சகோதரர்களின் சாதனை

 

கொரோனா நோயாளிகள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி: சகோதரர்களின் சாதனை

வாழும் வாழ்க்கை முறையில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கிறது. என்னதான் கைகளை அடிக்கடி கழுவினாலும் மாஸ்க் அணிந்து கொண்டாலும் கூட்ட நெரிசலில் சிக்கும் போதெல்லாம் கொரொனா தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

கொரோனா நோயாளிகள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி: சகோதரர்களின் சாதனை

இதற்கெல்லாம் வரப்பிரசாதமாக வந்திருக்கிறது எச்சரிக்கும் கருவி. கொரோனா நோயாளிகள் அருகில் வந்தால் பீப் ஒலி மூலமாக அறிவிக்கை செய்கிறது இந்த கருவி. பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள் இந்த கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவர்களது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமையும் வழங்கியிருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் அருண்குமார், அவரது சகோதரர் பத்தாம் வகுப்பு படிக்கும் அபிஜித் குமார் இருவரும் இணைந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இவர்கள் கண்டுபிடித்த கருவியின் பெயர் சி. டி. டி. எம்.

கொரோனா நோயாளிகள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி: சகோதரர்களின் சாதனை

இக்கருவியை கடந்த வருடம் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இவர்கள் கடின உழைப்பைப் பயன்படுத்தி கண்டுபிடித்திருக்கிறார்கள். இவர்களின் கண்டுபிடிப்புக்கு மார்ச் 4 ஆம் தேதி மத்திய அரசு காப்புரிமை அலுவலகம் சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

விரைவில் வணிகரீதியான விற்பனை மேற்கொள்ள பீகாரைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இந்த சகோதரர்கள் பேசி வருகின்றனர். இந்த கருவியானது பாண்டேஜ் வடிவத்தில் இருக்கிறது. இதை நாம் அணிந்திருக்கும் ஆடையில் பொருத்திக் கொள்ளலாம். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் இந்த கருவி பீப் ஒலி செய்து எச்சரிக்கிறது.

கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சென்றால் கொரோனா தொற்று ஏற்படும் என்கிற பயத்தை போக்கி, கொரோனா நோயாளிகளை நமக்கு கணித்து சொல்கிறது இந்தக் கருவி. மாணவர்களின் இந்த சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.