’’மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’

 

’’மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக சார்பில் இ.எம்.மான்ராஜ், காங்கிரஸ் சார்பில் மாதவராவ், அமமுக சார்பில் சங்கீதப்பிரியா, மநீம குருவையா, நாம் தமிழர் அபிநயா ஆகியோர் களத்தில் இருந்தனர்.

இதில், கொரோனா அறிகுறியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்(63) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

’’மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’

வாக்குகள் எண்ணிக்கைக்கு முன்னரே மாதவராவ் உயிரிழந்துள்ளதால், அத்தொகுதி்யின் நிலைமை என்ன? இடைத்தேர்தல் வருமா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, ’’ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டுவிட்டதால், வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதற்காக அங்கே தேர்தலை ரத்து செய்ய முடியாது.

’’மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’

அந்த தொகுதியில் பதிவான வாக்குகள் திட்டமிட்டபடி மே-2ம் தேதி அன்று எண்ணப்பட்டு அத்தொகுதி முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். தேர்தல் முடிவுகளை வைத்துதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்த தொகுதியில் மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்படும்’’என்று தெரிவித்தார்.