’’செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்..’’-முதல்வர் இரங்கல்

 

’’செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்..’’-முதல்வர் இரங்கல்

செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன் என்று தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

’’செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்..’’-முதல்வர் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மாதவராவ்(63) கொரோனா அறிகுறியால் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் .சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து வந்த மாதவராவ், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்ததால், கூட்டணி கட்சியான திமுக தலைவர் ஸ்டாலின், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி திட்டமிட்டபடி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மாதவராவ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

’’செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன்..’’-முதல்வர் இரங்கல்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்களின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ,காங்கிரஸ் பேரியக்க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். அண்ணாரது ஆன்மா அமைதிகொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி.

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இன்று காலை சிகிச்சைப் பலனின்றி அவர் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அவரது இழப்பைத் தாங்கும் மனவலிமையை எல்லாம் வல்ல இறைவன் குடும்பத்தினருக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வழங்கிடவும், அவரது ஆன்மா நற்கதியடையவும் பிரார்த்திக்கின்றேன்’’என்று தெரிவித்துள்ளார் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் தொகுதி்யின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்.

’’ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவி்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.