’’மந்திரிசபை பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை..’’

’’மந்திரிசபை பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை..’’

திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்கிற நினைப்பிலேயே இருக்கிறார்கள் ஸ்டாலின் உள்பட அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும். திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட கே.என்.நேரு, தான் வெற்றி பெற்று அமைச்சர் ஆகப்போவதாகவே தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வருவதாக தகவல். திமுகதான் வரப்போகிறது என்று அக்கட்சிக்கு தேர்தல் வேலைகள் செய்து வந்த ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொன்னதை கேட்டு, அவரையும் அவரது குழுவினரையும் நேரில் சந்தித்து நன்றி சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

’’மந்திரிசபை பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை..’’

அதுமட்டுமா, ஆட்சி மாற்றம் வரப்போகிறது…புதிய ஆட்சி வரப்போகிறது என்றே அவர் சொல்லிக்கொண்டே இருக்கிறார். புதிய ஆட்சி வரும் வரை சட்டம் ஒழுங்கை முறையாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று காவல்துறையை வலியுறுத்தி வருகிறார். இது போதாது என்று, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முடிவு வர ஒரு மாத காலம்தான் இருக்கிறது. அதனால், புதிய நியமனங்களை இப்போது செய்ய வேண்டாம். அவரம் வேண்டாம் புதிய ஆட்சி வரும் வரைக்கும் பொறுத்திருங்கள் என்று சொல்கிறார்.

’’மந்திரிசபை பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை..’’

புதிய ஆட்சி வரப்போகிறது என்றே திமுகவினர் முழுக்க முழுக்க நம்பிக்கொண்டிருப்பதால்தான் மந்திரி சபை பட்டியல் வரைக்கும் போய்விட்டார்கள் போலிருக்கிறது.

’’மந்திரிசபை பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை..’’

’’தேர்தல் முடிவுகளே வெளிவராத நிலையில் மந்திரிசபை அமைக்கும் பட்டியல் தயாரிப்பதில் ஸ்டாலின் குடும்பத்தில் குடுமி பிடி சண்டையால், ஸ்டாலின் விரக்தி, அடைந்துள்ளதாக தகவல். மக்கள் தீர்ப்புக்காக காத்திருக்காமல், சென்ற 2016 தேர்தலிலும் இப்படித்தான் உங்கள் குடும்பம் அவசர அவசரமாக மந்திரிசபை பட்டியல் தயாரித்தது. கடைசியில் என்ன நடந்தது? உங்கள் குடும்ப தீர்ப்பு முக்கியமல்ல..மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! காத்திருங்கள்…’’என்கிறார் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம்.