மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

 

மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

முந்தைய தேர்தல்களிலெல்லாம் மறைமுகமாக நடந்து வந்த பணப்பட்டுவாடா இப்போது வெளிப்படையாகவே நடக்கிறது. பணம் கொடுத்தவர்களை பிடித்துக் கொடுத்து வந்து காலம் போக, பணம் கொடுக்கவில்லை என்று சாலைமறியல் செய்யும் அளவிற்கு வந்துவிட்டனர் வாக்காளர்கள். இனிவரும் தேர்தல் காலங்களில் பணம் கொடுக்கவில்லை என்றால் வாக்காளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் எல்லாம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரண்டு தொகுதிகள் மட்டுமே அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஓபிஎஸ்- தங்க தமிழ்ச்செல்வன் மோதிக்கொண்ட போடிநாயக்கனூர் தொகுதி. அடுத்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரும் மோதிக்கொண்ட கரூர் தொகுதி.

இதில் கரூர் தொகுதியில் நடந்த பிரச்சாரத்தையும் பணப்பட்டுவாடாவையும்தான் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் கூட பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் அத்தொகுதி மக்கள். காரணம், அத்தொகுதியில் செந்தில்பாலாஜியும் விஜயபாஸ்கரும் அடித்த கூத்துக்கள் அப்படி என்று அப்பகுதியினர் விவரிக்கின்றனர்.

திருமங்கலம் இடைத்தேர்தலில் தான் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய் கொடுக்கப்பட்டது என்று பேசப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 3,000 முதல் 4,000 வரைக்கும் கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இதற்கு அடுத்தபடியாக…இல்லை இல்லை, இதற்கு அடுத்தபடியாக என்று கூட சொல்ல முடியாது. இதற்கு முன்னதாக கரூரில் ஒரு ஓட்டுக்கு 5000 கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

அதாவது, திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஒரு ஓட்டுக்கு 2000 ரூபாய் கொடுத்து வந்ததாகவும், இதைப்பார்த்த அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய் அள்ளி வீசியதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னைவிட ஆயிரம் ரூபாய் அதிகம் கொடுத்து விட்டார் என்பதால், தன் பங்குக்கு வேறு ஏதாவது செய்ய வேண்டுமே என்று வீடு வீடாக சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் செந்தில்பாலாஜியின் தரப்பில் ஒரு கொலுசு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கொலுசின் மதிப்பு 1200 ரூபாய்க்கு மேல் என்று சொல்லப்படுகிறது.

மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

செந்தில்பாலாஜி இப்படி பெண்களை கவர்ந்ததை பார்த்த அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், தன் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று, வீடு வீடாக சென்று ஒரு டோக்கன் கொடுத்து, ’’எலக்ஷனில் என்னை ஜெயிக்க வைத்தால், 2 கிராம் தங்கத்தில் மூக்குத்தி அல்லது அந்த மதிப்புக்கு ஏற்ற விலையில் பட்டுப்புடவை’’ என்று சொன்னதாக தகவல்.

மாஜி – சிட்டிங் திருவிளையாடல்! -திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிய கரூர் பார்முலா

இதைப்பார்த்த செந்தில்பாலாஜி, தன் ஆதரவாளர்களின் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு டோக்கன் கொடுத்து, ’’என்னை ஜெயிக்க வைத்து விட்டால் எலக்சன் முடிஞ்சதும் ஒவ்வொரு டோக்கனுக்கும் 5000 தருவேன்’’ என்று அள்ளிவிட்டு இருக்கிறாராம்.

’மாஜி 5 ஆயிரம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் என்றால், ’சிட்டிங்’ சொன்ன இரண்டு கிராம் தங்கத்தின் விலை 8 ஆயிரத்துக்கும் மேல் போகிறது. மக்கள் என்ன முடிவு எடுத்தார்களோ தெரியவில்லை.