புதிய அரசு அமையும் வரை… துரைமுருகனை தொடர்ந்து ஸ்டாலின்!

 

புதிய அரசு அமையும் வரை… துரைமுருகனை தொடர்ந்து ஸ்டாலின்!

புதிய ஆட்சி வரப்போகிறது அதற்குள் ஏன் இத்தனை அவசரம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டதற்கும், தென்மண்டல பசுமை தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை நியமனம் செய்ததற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ’’பொறுத்ததுதான் பொருத்தி இன்னும் ஒரு மாத காலம் பொறுக்கக்கூடாதா?’’ என்று கேள்வியை எழுப்பியிருந்தார் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.

புதிய அரசு அமையும் வரை… துரைமுருகனை தொடர்ந்து ஸ்டாலின்!

இதை அடுத்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், புதிய ஆட்சி அமையும் வரை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட என்ற காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆளுநரின் நியமன உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன், புதிய ஆட்சி வரும் வரை… என்று சொன்னது மாதிரி, ஸ்டாலினும் புதிய அரசு அமையும் வரை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

அரக்கோணம் இரட்டைக்கொலை தொடர்பாக ஸ்டாலின் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், புதிய அரசு அமையும் வரை சட்டம்-ஒழுங்கை காவல்துறையினர் நிலைநாட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் எங்கும் யாராலும் பொது அமைதிக்கு பங்கம் விளைந்து பொது மக்களின் நிம்மதியைக் குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய அரசு அமையும் வரை… துரைமுருகனை தொடர்ந்து ஸ்டாலின்!

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் தேர்தலோடு அவற்றை மறந்துவிட்டு தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக காவல்துறை தலைவர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக்கூடாது என்றும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.