தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி… கமல் கண்டனம்

 

தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி… கமல் கண்டனம்

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றுபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர்சட்டத்தில் சிறைப்படுத்தவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி… கமல் கண்டனம்

மேலும், இந்தப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல்-10 அன்று தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதமசன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர் என்கிறார் திருமாளவன்.

தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி… கமல் கண்டனம்

வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அதிமுக – பாஜக- பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலுத்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், ’’தேர்தல் முரண் தேர்தலோடு என்றில்லாமல்,சாதிய வன்மமாக மாறி அரக்கோணத்தில் அர்ஜூனன், சூரியா என இரண்டு இளைஞர்களின் வாழ்வைப் பறித்து விட்டது. படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி கொலையாளிகள் தப்பித்துவிட அனுமதிக்கக் கூடாது.’’என்று தெரிவித்திருக்கிறார்.