கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நீதிபதி அதிருப்தி அடைந்தது ஏன்?

 

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நீதிபதி அதிருப்தி அடைந்தது ஏன்?

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்ததற்கு தடை விதித்திருக்கிறது உயர்நீதிமன்றம். சட்டப்படி தேவைப்படும் தகுதியை கிரிஜா வைத்தியநாதன் பெற்றிருக்கவில்லை என்றுதான் நீதிபதி அதிருப்தி தெரிவித்து இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறார்.

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நீதிபதி அதிருப்தி அடைந்தது ஏன்?

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பக்கப்பட்டிருக்கிறது. நீதிபதியின் அதிருப்தி குறித்து முன்னதாகவே பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், ‘’இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது”, இது பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் எழுதி சிவாஜி பேசிய புகழ்பெற்ற வசனம். இது எதுக்கு இப்போது என்று நினைத்தால்…

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னக அமர்விற்கு துறைசார் நிபுண உறுப்பினராக, தமிழக முன்னாள் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனை நியமித்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல அறமற்ற செயலும் கூட’’ என்று தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும், ‘’பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் சூழலியல் துறைகளில், நிறுவனங்களில் பணியாற்றி இருக்கவேண்டும், ஆனால் கிரிஜாவிற்கு அந்த அனுபவம் கிடையாது. அவருடைய நியமனத்தை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது.

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நீதிபதி அதிருப்தி அடைந்தது ஏன்?

இந்த நிலையில் அவர் பசுமை தீர்ப்பாயத்தின் “தென்னக அமர்வுக்கு” நிபுண உறுப்பினராக அமர்த்தப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இது அறமற்ற செயல்,ஏனெனில், அவர் தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்துள்ளார். தலைமை செயலர் என்பதால் “சூழலியல் திட்டங்கள்” தொடர்பாக பல்வேறு முடிவுகளை அரசின் சார்பாக எடுத்திருப்பார், குறிப்பாக அவர்”சதுப்பு நில பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராகவும்”இருந்துள்ளார். அப்போதெல்லாம் அவர் எடுத்த முடிவுகள் தொடர்பாக வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளன அல்லது தாக்கல் செய்யப்படவுள்ளன.

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தில் நீதிபதி அதிருப்தி அடைந்தது ஏன்?

இந்த வழக்குகளை இனிமேல் விசாரித்து தீர்ப்பு சொல்லப்போவது அன்றைய தலைமை செயலர், இன்றைய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுண உறுப்பினர் கிரிஜா வைத்தியநாதன். அதாவது அதிகாரியாக தான் முடிவெடுத்த விஷயங்கள் குறித்து நீதிபதியாக தீர்ப்பு எழுதவுள்ளார் கிரிஜா.

இந்த பெருமை யாருக்கு கிடைக்கும்? அதாவது விளையாட்டு வீரரும் அவரே, நடுவரும் அவரே. இது விசித்திர வழக்கு இல்லாமல் வேறு எதுவாம்?’’ என்று கேட்டிருந்தார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன்.