‘’புதிய ஆட்சி வரப்போகிறது; அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?’

 

‘’புதிய ஆட்சி வரப்போகிறது; அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?’

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘’புதிய ஆட்சி வரப்போகிறது; அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?’

தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்ட செல்வகுமார், அடுத்த 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நியமனம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியிட்டிருக்கிறார். அதில், ஆளுநரின் இந்த அறிவிப்பு அவசர முடிவு என்று, இது ஆளுநருக்கு அழகல்ல என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தனது அறிக்கையில், ’’தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத்தேர்தல் 6.4.2021 அன்றுதான் நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கின்ற நல்ல தருணம் இது. புதிய அரசு, பல புதிய சிந்தனைத் திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை தெளிவாகத் தெரிகிறது’’என்று தெரிவித்திருக்கிறார்.

‘’புதிய ஆட்சி வரப்போகிறது; அதற்குள் ஏன் இத்தனை அவசரம்?’

’’வாக்குப்பதிவு நடந்த அன்றோ, அடுத்த நாளோ வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி பதவி ஏற்றிருக்கும். ஆனால் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒருமாத காலம் இடைவெளி இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்பைப் பல ஆண்டுகளுக்கு ஏற்கப் போகும் துணை வேந்தரின் பெயரை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல’’ என்கிறார்.

துரைமுருகன் மேலும் இந்த விவகாரம் குறித்து, ‘’தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத் துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார் அறிவிக்கப்பட்டிருப்பதாகச் செய்தித்தாள்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. பல நாட்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவியை, புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்துவிடும்’’என்று கேட்கிறார்.

கிரிஜா வைத்தியநாதனின் நியமனம் குறித்தும் அவர், ’’துணைவேந்தர் செல்வகுமார் நியமனம் போதாது என்று, தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு தன் பங்கிற்கு நியமனம் செய்திருக்கிறது. பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஏன் ஒருமாத காலம் பொறுக்கக் கூடாது?’’என்ற கேள்வியை எழுப்புகிறார்.