’’நான் ஒரு வங்காள பெண் புலி’’-மம்தா பாய்ச்சல்

 

’’நான் ஒரு வங்காள பெண் புலி’’-மம்தா பாய்ச்சல்

மேற்கு வங்க தேர்தலில் நான்காவது கட்ட பிரச்சாரத்தில் பாஜகவை கடுமையாக சாடினார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மம்தா பானர்ஜி.

’’நான் ஒரு வங்காள பெண் புலி’’-மம்தா பாய்ச்சல்

கூச் பெஹாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய மம்தா, ‘’குஜராத்திகள் வங்காளத்தை கைப்பற்றுவதை தடுக்க வேண்டும் என்றால் திரிணாமுல் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குஜராத்தில் இருந்து வந்த குண்டர்கள் வங்காளத்தை கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும்’’என்றார்.

அவர் மேலும், ‘’பாஜகவினர் அசாமில் இருந்து குண்டர்களை கொண்டுவந்து வெடிகுண்டுகள் வெடித்து அச்சுறுத்துவார்கள்.பயப்படவேண்டாம்’’ என்று தைரியம் கொடுத்தவர், ‘’பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்கும் அசாமை போல் முகாம்களை கட்டுவார்கள். அவர்கள் 14 லட்சம் வங்காளர்களை தடுப்பு முகாம்களில் வைத்திருக்கிறார்கள். அவர்களூக்கு எதிர்காலம் இல்லை. நாங்கள் அந்த ஏழை மக்களுக்காக போராடுகிறோம்’’என்றார்.

‘’பாஜகவினர் என்னை பணத்தால் எதுவும் செய்ய முடியாது. நான் ஒரு வங்காள பெண் புலி. ஒருப்போதும் நான் பாஜகவுக்கு வளைந்துகொடுக்க மாட்டேன்’’என்றார் அழுத்தமாக.