உதயநிதியை அடுத்து வானதி சீனிவாசனும் வசமாக சிக்கினார்

 

உதயநிதியை அடுத்து வானதி சீனிவாசனும் வசமாக சிக்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் நேற்று தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க சென்றார். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளராகவும் இருக்கும் உதயநிதி பிரச்சாரத்திற்கு சென்றது போலவே, கட்சியின் சின்னம் பொறித்த சட்டையுடன் வாக்களிக்க சென்றார். இது சர்சை ஆனது.

உதயநிதியை அடுத்து வானதி சீனிவாசனும் வசமாக சிக்கினார்

இது தேர்தல் விதிகளை மீறிய செயல் என்பதால் அதிமுகவின் பாபு முருகவேல், உதயநிதி மீது தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். புகாரினை பெற்றுக்கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் இதே புகாரில் சிக்கியிருக்கிறார்.

உதயநிதியை அடுத்து வானதி சீனிவாசனும் வசமாக சிக்கினார்

கோவை டாடாபாத் வாக்குச்சாவடியில் அவர் வாக்களிக்க சென்றபோது, பாஜக சின்னமான தாமரை முத்திரையை தனது புடவையில் குத்தி வந்திருந்தார். இது தேர்தல் விதிமீறல் என்பதால் திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

உதயநிதியை அடுத்து வானதி சீனிவாசனும் வசமாக சிக்கினார்

கடந்த 2014ம் ஆண்டு அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், வாக்குப்பதிவு நாளன்று கட்சியின் சின்னமோ, முத்திரையோ எந்தவித அடையாளத்துடனும் வாக்குச்சாவடிக்குள் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியிருக்கிறது. அதை மீறிய உதயநிதி, வானதி மீது புகார் கூறப்பட்டிருக்கிறது.