சலசலப்பை ஏற்படுத்திய பினராயி விஜயன் பேச்சு

 

சலசலப்பை ஏற்படுத்திய பினராயி விஜயன் பேச்சு

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு நேற்று ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசி்யபோது, ‘’ இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு சபரிமலை ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களின் துணை இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.

சலசலப்பை ஏற்படுத்திய பினராயி விஜயன் பேச்சு

பினராயின் விஜயனின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இடதுசாடி இயக்கத்தில் இருந்து முதல்வராக இருப்பவர், இந்துக்களின் ஓட்டுக்களுக்காக இப்படி பேசலாமா என்று எதிர்கட்சியினர் கேட்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் செல்ல அனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கேரள அரசு கையாண்ட விதம்தான் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எதிரொலித்தது. ஐயப்பனின் கோபம் இடது ஜனநாயக முன்னணி கூட்டணிக்கு எதிராகவே இருக்கும் என்ற பேச்சு இருந்தது. ஆனால், பினராயி விஜயனோ, இந்த அரசாங்கம் மக்களை பாதுகாக்கிறது. எல்லா கடவுள்களும் மக்களுக்கு நல்லது செய்பவர்களூடன் தான் இருக்கிறார்கள் என்றார்.

சலசலப்பை ஏற்படுத்திய பினராயி விஜயன் பேச்சு

பினராயி விஜயன் இப்படி சொன்னதற்கு, காங்கிரஸ் எம்பியும் நேமமின் வேட்பாளருமான முரளீதரன், முதல்வர் ஐயப்பனை எத்தனை கூப்பிட்டாலும் அவருக்கு கை கொடுக்கப்போவதில்லை என்கிறார்.

’’மக்களின் தீர்ப்பை பார்த்து முதல்வருக்கு அச்சம் வந்திருப்பதையே இது காட்டுகிறது. ஆனால் அவர் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்’’ என்கிறார் முன்னாள் முதலர் உம்மன் சாண்டி.