Home அரசியல் ஏன் ஓட்டுப்போடவில்லை? பரபரப்பை ஏற்படுத்தும் பார்த்திபன் விளக்கம்

ஏன் ஓட்டுப்போடவில்லை? பரபரப்பை ஏற்படுத்தும் பார்த்திபன் விளக்கம்

ஏப்- 1 – ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் ‘ஆறு”தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக’ என்று தேர்தலுக்கு வாக்களிப்பது குறித்து இயக்குநர் ஆர்.பார்த்திபன் ஒருவாரத்திற்கு முன்பே கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து, ஆறு என்பது நாட்டின் வளம்!இரு கரைகளையும் உடைத்து வரையின்றி பாய்ச்சி எல்லோரும் எல்லாமும் பெற உரியதைத் தேர்ந்தெடுப்போம்! என்றும் கூறியிருந்தார்.

ஏன் ஓட்டுப்போடவில்லை? பரபரப்பை ஏற்படுத்தும் பார்த்திபன் விளக்கம்
ஏன் ஓட்டுப்போடவில்லை? பரபரப்பை ஏற்படுத்தும் பார்த்திபன் விளக்கம்

நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல…ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்றும் கடந்த ஐந்தாம் தேதி அன்று தெரிவித்திருந்தார்.

எல்லோருக்கும் இப்படி சொல்லிக்கொண்டே இருந்த பார்த்திபன், நேற்றைக்கு ஓட்டுப்போட வரவில்லை. இதுகுறித்து அவர் இன்று அளித்துள்ள விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்குப்பதிவு

’’வணக்கமும் நன்றியும்! ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு!
வருத்தமும், இயலாமையும். இரண்டாம் தவனை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண், காது, முகம் முழுவதும் வீங்கிவிட்டது. டாக்டருக்குக் போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்துக்கொண்டேன். எனவே தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற reactions. அதுவும் எனக்கு ஏற்கனவே allergy issues இருந்ததால் மட்டுமே trigger ஆனது. என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்…’’ என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.

ஏன் ஓட்டுப்போடவில்லை? பரபரப்பை ஏற்படுத்தும் பார்த்திபன் விளக்கம்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“எனக்கு கொரோனா பணி தான் முக்கியம்” – மருத்துவமனை டீன்களை மாற்றி முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

நடந்துமுடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே அதிகார மட்டத்திலும்...

அருண்ராஜா காமராஜ் மனைவி இறுதி சடங்கில் உதயநிதி

இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவரது இறுதி சடங்கில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது...

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

தமிழகத்தையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க, அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசுக்கு, இது...

வாரத்தில் 55 மணி நேரம் வேலை செய்பவர்களின் உயிருக்கே ஆபத்து!

வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்பவர்களுக்கு உயிருக்கு ஆபத்து என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் இத்தகைய...
- Advertisment -
TopTamilNews