அமைச்சர் பெஞ்சமினை மிரட்டிய திமுகவினர்

 

அமைச்சர் பெஞ்சமினை மிரட்டிய திமுகவினர்

அமைச்சர் பெஞ்சமின் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று வாக்குப்பதிவினை முன்னிட்டு எம்.ஜி.ஆர். ஆதர்ஸ் பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட பெஞ்சமின் சென்றார். அப்போது திமுகவினர் விதிமுறைகளை மீறி நடந்துகொண்டனர் என்றும், அவர்களை தட்டிக்கேட்டபோது, அமைச்சரை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டல் விடுத்தனர் திமுகவினர் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் பெஞ்சமினை மிரட்டிய திமுகவினர்

இதையடுத்து அமைச்சர் பெஞ்சமின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி .சத்யபிரதா சாகுவிடம், திமுகவினரின் அராஜகம் குறித்து புகார் அளித்திருக்கிறார். ஆனால், திமுகவினரோ அமைச்சர் பெஞ்சமின் தான் தங்களை தரக்குறைவாக திட்டி மிரட்டல் விடுத்தார் என்று கூறிவருகிறார்கள்.