‘’நாங்க அடங்கி இருப்போம்; நீங்க அடங்கி இருப்பீங்களா’’- சீமான் ஆவேசம்

‘’நாங்க அடங்கி இருப்போம்; நீங்க அடங்கி இருப்பீங்களா’’- சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமன் வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

‘’நாங்க அடங்கி இருப்போம்; நீங்க அடங்கி இருப்பீங்களா’’- சீமான் ஆவேசம்

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை 10 ஆண்டுகள் தேர்தல் நிற்க தடை செய்யப்படுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் அச்சம் வரும். ஆனால், அதுதான் இல்லை. சாலையில் வருவோ போவோரைத்தான் பறக்கும்படை பிடிக்கிறது. தொகுதியில் எங்கே போய் நிற்கிறது?’’என்று கேட்ட சீமான்,

‘’எல்லோருக்கும் தெரியும் காசு கொடுக்கிறார்கள் என்று. கோவையில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்ட வீடுகளில் ‘பெய்டு’ என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நாங்கள் இதை பார்க்கிறோம். தேர்தல் ஆணையமும் இதை பார்க்க வேண்டும். ’’என்றார்.

‘’நாங்க அடங்கி இருப்போம்; நீங்க அடங்கி இருப்பீங்களா’’- சீமான் ஆவேசம்

அவர் மேலும், ‘’22 நாட்கள் கழித்து வாக்கு எண்ணுவதற்கு தேர்தலை ஏப்ரல் 30ம் தேதி நடத்தியிருக்கலாமே. எதற்காக பெட்டியை ஒரே இடத்தில் 22 நாட்கள் போட்டு அடைத்து வைக்க வேண்டும். இது சந்தேகத்தை எழுப்புகிறது’’என்றவர்,

தேர்தலுக்கு பின்னர் ஊரடங்கு விவகாரம் குறித்து பேசியவர், ‘’எலெக்சன் முடிஞ்ச உடனே ஊரடங்குனு ஒண்ணு போடுவீங்க. நாங்க அடங்கி இருப்போம்; நீங்க அடங்கி இருப்பீங்களா’என்றார் ஆவேசமாக.