முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைந்தார்

முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைந்தார்

இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு(வயது88) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைந்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் சி.கே.நாயுடுவின் மகள்தான் சந்திரா நாயுடு. அவர் 1977ம் ஆண்டில் இந்தூரில் நடைபெற்ற பாம்பே – எம்.சி.சி. அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட்டில் முதன்முறையாக வர்ணனையாளராக இருந்தார். அதன்பின்னர் சிறுது காலம் வர்ணனையாளராகவே இருந்த சந்திரா நாயுடு பின்னர் அரசு மகளிர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் சந்திரா நாயுடு மறைந்தார்

தந்தை சி.கே.நாயுடு குறித்து புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார் சந்திரா நாயுடு. அதில், இந்திய கிரிக்கெட்டை உலக அரங்கில் உயர்ந்த்திய தந்தையின் பணி குறித்தும், தந்தையின் பெயரில் வழங்கப்படும் கிரிக்கெட் விருது குறித்து அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முதுமையினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். சந்திரா நாயுடுவின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.