24,000 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்த்தெழுந்த விலங்கு; குட்டிகளை ஈன்றது

24,000 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்த்தெழுந்த விலங்கு; குட்டிகளை ஈன்றது

24,000 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ரோட்டிபர்(rotifer)எனும் மிக நுண்ணிய விலங்கு உயிர்த்தெழுந்துள்ளதோடு அல்லாமல் குட்டிகளையும் ஈன்றுள்ளது. இது அறிவியல் ஆய்வில் புதிய சகாப்தம் என்று போற்றப்படுகிறது.

24,000 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்த்தெழுந்த விலங்கு; குட்டிகளை ஈன்றது

ரஷ்யாவில் உள்ள புஷ்சினோ அறிவியல் மையத்தினை சேர்ந்த ஸ்டாஸ் மலாவின் தலைமையிலான குழு ஒன்று சைபீரியாவில் உறை நிலையில் காணப்படுகின்ற அலசியா ஆற்றில் 6 ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, 24,000 ஆண்டுகளுக்கு முன்னர் பனியில் உறைந்து போன ரோட்டிபர் எனப்படும் ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான புழு போன்ற மிக நுண்ணிய விலங்கினை விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

உறைபனியில் இருந்து மீட்டர் ரோட்டிபருக்கு உணவு கொடுத்ததும் அது இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது. பெண் துணையின்றி இனப்பெரும்க்கம் செய்யும் வகையை சேர்ந்தது ரோட்டிபர். இந்த ரோட்டிபர் குட்டிகளையும் ஈனத்தொடங்கி இருக்கிறது.

24,000 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்த்தெழுந்த விலங்கு; குட்டிகளை ஈன்றது

இதுகுறித்து ஸ்டாஸ் மலாவின், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் உறைபனியில் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது உண்டு. ஆனா, மூளை, நரம்பு மண்டலம் ஆகிய உறுப்புகளுடன் கூடிய மிக நுண்ணிய விலங்கு ரோட்டிபர் முதன் முறையா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நீரில் காணப்படும் ரோடிபர் 23 ஆயிரத்து 960ஆண்டுகள் முதல்24 ஆயிரத்து 485 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நுண் விலங்கு என்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது என்கிறார்.

24,000 ஆண்டுகளுக்கு பின்னர் உயிர்த்தெழுந்த விலங்கு; குட்டிகளை ஈன்றது

அவர் மேலும், விலங்கியல் அறிவியல் ஆய்வில் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்திருக்கிறது இந்த கண்டுபிடிப்பு என்கிறார்.