240 வைரங்கள் பதிக்கப்பட்ட‌ நீட்டா அம்பானியின் இரண்டரை கோடி கைப்பை!

 

240 வைரங்கள் பதிக்கப்பட்ட‌ நீட்டா அம்பானியின் இரண்டரை கோடி கைப்பை!

நீட்டா அம்பானியின் கைப்பை முதலை தோலால் ஆனது, அதில் 240 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மிகப்பிரபலமான கிறிஸ்ட்டீ’ஸ் ஏல நிறுவனம் மூலம் ஏலம்போன மிக காஸ்ட்லியான கைப்பை இப்போது நீட்டா வசம். மிகப்பெரிய பணக்காரர்களுக்கான கைப்பையை தயாரிக்கும் நிறுவனமான பெர்கின் நிறுவனம் இந்த கைப்பையை தயாரித்து இருந்தது.

காஸ்ட்லியான பொருட்களை கையோடு எடுத்து செல்ல நேரும்போது, தங்கள் கைப்பை குறித்து பெண்கள் கவனமாக இருப்பார்கள் அல்லவா? கையே போனாலும் கைப்பையை விடமாட்டாரகள் அந்தளவு கவனம் கைப்பையில் இருக்கும். இது நம்மைப்போல சாதாரணர்களுக்கு. இதே அம்பானி வீட்டுப் பெண்களாக இருந்தால்? அதுவும் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானியாக இருந்தால், அவர் கைப்பை எப்படி இருக்கும்? கைப்பையில் என்ன இருக்கும்? கைப்பை எவ்வளவு இருக்கும்?


Nita Ambani's handbag


அதிகம் இல்லை ஜென்டில்மென், இரண்டரை கோடி ரூபாய்தான். கைப்பை ரெண்டரை கோடியா என்றால், ஆம். காரணம், நீட்டா அம்பானியின் கைப்பை முதலை தோலால் ஆனது, அதில் 240 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டு மிகப்பிரபலமான கிறிஸ்ட்டீ’ஸ் ஏல நிறுவனம் மூலம் ஏலம்போன மிக காஸ்ட்லியான கைப்பை இப்போது நீட்டா வசம். மிகப்பெரிய பணக்காரர்களுக்கான கைப்பையை தயாரிக்கும் நிறுவனமான பெர்கின் நிறுவனம் இந்த கைப்பையை தயாரித்து இருந்தது. பெருமூச்சு விட்டாச்சா? அப்படியே அவங்கவங்க பாக்கெட்ல இருக்குற பர்ஸை எடுத்து எவ்ளோ இருக்குன்னு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்!