“5 லட்சம் கொண்டு வரியா ,இல்லேன்னா மகனோட பிணத்தை கொண்டு போறியா” -தன்னைத்தானே கடத்திக்கொண்டார் -பெற்றோரை மிரட்டிய என்ஜினீயர்..

“5 லட்சம் கொண்டு வரியா ,இல்லேன்னா மகனோட பிணத்தை கொண்டு போறியா” -தன்னைத்தானே கடத்திக்கொண்டார் -பெற்றோரை மிரட்டிய என்ஜினீயர்..

டெல்லியில் அங்கித் குப்தா என்ற 24 வயது வாலிபர் எம்.பி.ஏ பட்டம் பெறுவதற்காக ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் சேர விரும்பினார்.ஆனால் இரண்டு முறை எக்ஸாம் எழுதியும் அவருக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை .இதனால் கடும் மன உலைச்சலுக்கு ஆளான அவர் தற்கொலைக்கு முயன்று போலீசாரால் காப்பாற்றப்பட்டார் .

“5 லட்சம் கொண்டு வரியா ,இல்லேன்னா மகனோட பிணத்தை கொண்டு போறியா” -தன்னைத்தானே கடத்திக்கொண்டார் -பெற்றோரை மிரட்டிய என்ஜினீயர்..
அங்கித் குப்தா டெல்லியில் ஐஐடி யில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டம் முடித்த அவர், பின்னர் ஹரியானாவின் குருகிராமில் ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு மாறினார். தற்போது அவர் ஊரடங்கால் வீட்டிலிருந்து வேலை செய்து கொண்டிருந்தார்.அவர் மேலும் அகமதாபாத் ஐஐஎம் மில் எம்பிஏ படிக்க விரும்பியும் இடம் கிடைக்கவில்லை .

“5 லட்சம் கொண்டு வரியா ,இல்லேன்னா மகனோட பிணத்தை கொண்டு போறியா” -தன்னைத்தானே கடத்திக்கொண்டார் -பெற்றோரை மிரட்டிய என்ஜினீயர்..
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான என்ஜினீயர் அங்கித் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி ,தன்னுடைய பெற்றோருக்கு போன் செய்து உங்கள் மகனை உயிரோடு பார்க்க வேண்டுமானால் 5 லட்சம் கொண்டு வாருங்கள் என்று கூறி போனை வைத்து விட்டார் .
இதனால் பயந்த அவரின் பெற்றோர் உடனே போலீசுக்கு தகவல் தந்தனர் .போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து, அவரின் போன் சிக்னல் மற்றும் சிசிடிவி கேமரா ஆகியவற்றின் உதவியுடன் அவரை ரயில் நிலையத்தில் கண்டு பிடித்தனர் .
அங்கு அவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொள்ளவிருந்தார் .கடைசி நேரத்தில் போலீசார் அவரை காப்பாற்றி அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர் .