கொங்கு மண்டலத்தின்கீழ் வரும் ஊர்களின் பட்டியல்

 

கொங்கு மண்டலத்தின்கீழ் வரும் ஊர்களின் பட்டியல்

மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் நிர்வாக வசதிக்காகவும் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 25 ஆண்டு காலமாக தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரையை தலைமையாகக் கொண்டு தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்றும், திருச்சியை தலைமையாகக் கொண்டு தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் இருந்துவரும் நிலையில் கொங்கு மண்டலத்தை மையமாகக் கொண்டு கொங்கு நாடு என்ற பெயரில் தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தின்கீழ் வரும் ஊர்களின் பட்டியல்

இந்நிலையில் கொங்கு நாட்டின் கீழ் வரும் ஊர்களின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஈரோடு, மூலனூர், காங்கேயம், பொங்கலூர், கோவை, அவினாசி, சூலூர், பல்லடம், பழனி, சின்ன தாராபுரம், சேந்த மங்கலம், மேலப்பாளையம், தாரமங்கலம், கொடுமுடி, சத்தியமங்கலம், பவானி, வாங்கல், உடுமலை, நாமக்கல், விருப்பாச்சி, கரூர், பொள்ளாச்சி, ஆனைமலை, ராசிபுரம், திருப்பூர், கவுந்தபாடி ஆகிய 24 ஊர்கள் இடம்பெற்றுள்ளன. 5 மாவட்டங்கள் கொங்கு மண்டலத்தின் கீழ் வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.