சென்னையில் இன்று ஒரே நாளில் 24 பேர் கொரோனாவால் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது சென்னையில் தான் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Most Popular

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...