துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 தான்! – தி.மு.க தேர்தல் கூத்து

 

துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 தான்! – தி.மு.க தேர்தல் கூத்து


தி.மு.க பொதுச் செயலாளர் தேர்தல் எதிர்பார்த்த படி நடந்து முடிந்துள்ளது. இவர்தான் வருவார் என்று கூறிய படி பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்களுக்கு ஆதரவாக எத்தனை பேர் மனுதாக்கல் செய்தார்கள் என்பது கட்சிக்குள் விவாதமாகி வருகிறது.

துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 தான்! – தி.மு.க தேர்தல் கூத்து


பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் ஒரு மனு தாக்கல் செய்தார். அவரது ஆதரவாளர்கள் 23 மனுக்களை அவருக்காக தாக்கல் செய்தனர். டி.ஆர்.பாலுவுக்கு அவருடைய மனுவைச் சேர்த்து 16 தான் வந்துள்ளது.
இந்த பதவிகளுக்கு வேறு யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யாததால்

துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 தான்! – தி.மு.க தேர்தல் கூத்து

துரைமுருகன், டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக் குழு கூட்டத்தில் வெளியாகும். தற்போது துரைமுருகனுக்கு மட்டும் அதிக வேட்புமனு வந்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

துரைமுருகனுக்கு 24, டி.ஆர்.பாலுவுக்கு 16 தான்! – தி.மு.க தேர்தல் கூத்து

துரைமுருகனுக்கு இணையாக டி.ஆர்.பாலுவுக்கு அவரது ஆதரவாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்ற குறை எழுந்துள்ளது. எப்படி இருந்தால் என்ன அவர்தான் பொருளாளர் ஆகிவிட்டாரே இனி எதற்கு பிரச்னை என்று சமாதானம் செய்து வருகிறார்களாம்!