24.8 செல்ஃபி கேமரா கொண்ட விவோ எக்ஸ்23 சிம்பொனி எடிஷன் அறிமுகம்

 

24.8 செல்ஃபி கேமரா கொண்ட விவோ எக்ஸ்23 சிம்பொனி எடிஷன் அறிமுகம்

விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போனின் சிம்பொனி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெய்ஜிங்: விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போனின் சிம்பொனி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் விவோ நிறுவனம் தனது விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போனின் மற்றுமொரு புதிய எடிஷனை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் இதே ஸ்மார்ட்போனின் ஸ்டார் எடிஷனை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து, தற்போது விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போனின் சிம்பொனி எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ எக்ஸ்23 ஸ்மார்ட்போன் முதன்முறையாக கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்23 சிம்பொனி எடிஷன் புதிய கிரேடியண்ட் நிறத்தை கொண்டுள்ளது. அதன் ரேம், பிராசஸர் மற்றும் கேமரா அம்சங்களில் சிறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்23 சிம்பொனி சிறப்பம்சங்கள்:

– 6.41 இன்ச் ஃபுல் எச்.டி டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர்

– 6 ஜிபி ரேம்

– 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

– 12 + 13 எம்.பி இரட்டை பின்பக்க கேமராக்கள், எல்இடி ஃபிளாஷ்

– 24.8 எம்.பி செல்ஃபி கேமரா

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

– 3400 எம்.ஏ.எச் பேட்டரி

விவோ எக்ஸ்23 சிம்பொனி எடிஷன் சீன விலை CNY 2,798 (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 28,900). இது முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ்23-ன் அறிமுக விலையை விட ரூ.8,000 குறைவு ஆகும். இந்த ஸ்மார்ட்போன் தற்போது விவோ நிறுவனத்தின் சீன இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது.