“24/7 whatsapp-video call helpline” சேவை : தமிழக அரசு அறிவிப்பு!

 

“24/7 whatsapp-video call helpline” சேவை : தமிழக அரசு அறிவிப்பு!

14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு அதாவது வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி போயுள்ளனர்.

tt

 

இருப்பினும் அரசு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க முடிந்தவரை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

t

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ”#21DayLockDown காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ, சைகை மொழியில் பேசுபவர்களின் உதவியுடன் “24/7 whatsapp-video call helpline” சேவை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் மூலம் செயல்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளி நண்பர்கள் 9700799993 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். #TNAgainstCorona’ என்று பதிவிட்டுள்ளார்.