24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை… தொல்லியல்துறைக்கு சிம்பு தேவன் பாராட்டு

கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை, கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் உள்ளிட்டவற்றின் மாதிரியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக, கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி என 24 மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50க்கும் மற்ற மொழி பதிப்புகள் ரூ.200க்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43வது புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இதில், கண்காட்சி அரங்குக்கு வெளியே “கீழடி – ஈரடி தமிழ் தொன்மங்கள்” என்ற தலைப்பில் தொல்பொருள் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. 

keezhadi excavation

கீழடி அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சுடுமண் குழாய், நீர் மேலாண்மை, கருப்பு – சிவப்பு மண்பாண்டங்கள் உள்ளிட்டவற்றின் மாதிரியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக, கீழடி அகழாய்வு முடிவுகள் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி என 24 மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள். தமிழ் மற்றும் ஆங்கில பதிப்புகள் ரூ.50க்கும் மற்ற மொழி பதிப்புகள் ரூ.200க்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் சிம்புதேவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிறப்பான பதிவு… சென்னை புத்தகக் கண்காட்சியில்” என்று குறிப்பிட்டுள்ளார். பலரும் அரசின் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர்.